Published : 07 Mar 2019 02:20 PM
Last Updated : 07 Mar 2019 02:20 PM

நாங்கள் துரைமுருகனுடன் கூட்டணி குறித்துப் பேசவில்லை: தேமுதிக நிர்வாகிகள் பேட்டி

திமுக பொருளாளர் துரைமுருகனைச் சந்தித்தது குறித்து தேமுதிக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். தாங்கள் துரைமுருகனை சொந்தப் பிரச்சினைக்காகச் சந்தித்தோம் என்று தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட தேமுதிக செயலாளர் இளங்கோ, அனகை முருகேசன் ஆகியோர் சுதீஷுடன் கூட்டாக இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

சேலம் இளங்கோ பேசியதாவது:

எங்களுடைய தனிப்பட்ட விஷயத்துக்காகத்தான் நாங்கள் துரைமுருகனைச் சந்திக்கச் சென்றோம். ஆனால் அது அரசியலாக்கப்பட்டுவிட்டது.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அதை நேற்றே பத்திரிகையாளர்களிடமும் சொல்லிவிட்டுச் சென்றோம். அதை அரசியலாக்காதீர்கள் என்றுதான் சொல்லிவிட்டு வந்தோம். அதற்கு விளக்கம் அளிக்கவே இங்கு வந்தோம்.

திமுக தரப்பில் நீங்கள் பேசியதாகவும், அதன் பின்னரே நீங்கள் துரைமுருகனைச் சந்திக்கச் சென்றீர்கள் என்று கூறுகிறார்களே?

துரைமுருகன் பேசிய விஷயத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் அரசியலே பேசவில்லை.

துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே?

அதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். நேற்றே நாங்கள் பர்சனல் விஷயம் என்றுதானே சொன்னோம்.

பர்சனல் என்றால் என்ன மாதிரியான பர்சனல்?

ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சியைப் போய் பார்க்கக்கூடாது என்பதில்லையே. பர்சனல் என்றால் அதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை.

துரைமுருகன் தங்களைத் தொடர்புகொண்டு பேசியதாக சொல்கிறாரே?

அதில் உண்மையில்லை.

ஆனால் துரைமுருகன் கூட்டணிக்காகப் பேசியதாக சொல்கிறாரே?

அதை அவரிடம்தான் கேட்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x