

தேர்தல் செலவுக்கு நிர்வாகிகளிடம் நிதி திரட்ட வேண்டும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் பேசியதற்கு நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால், தூத்துக்குடியில் நடந்த அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம் நடைபெற் றது. கூட்டத்தில் சஞ்சய் தத் பேசும் போது, “வரும் 13-ம் தேதி கன்னியா குமரியில் ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிகமான தொண்டர்கள் வர வேண்டும். இதற்கான செலவுகளை நீங்களே பொறுப்பேற்று செய்ய வேண்டும். தேர்தல் செலவுக்கு நிர்வாகிகளிடம் நிதி திரட்ட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண் முகம், “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் தொண்டர் கள் சோர்வடைந்துள்ளனர். அன் றாட செலவுக்கே வருமானம் இல்லை. 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கட்சிக்காக தொண்டர்கள் ஏராளமான விஷயங் கள் செய்துள்ளனர். ஆனால் கட்சி எங்களுக்கு என்ன செய்துள்ளது? இந்த சூழ்நிலையில் எங்களை செலவு செய்ய சொன்னால் எப் படி?” என ஆவேசமாக பேசினார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரிடம் இருந்து மைக்கை சஞ்சய் தத் பறித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இரு தரப்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மூத்த நிர்வாகிகளின் சமாதானத்தை தொடர்ந்து அமைதி திரும்பியது.
தாக்குதல்கள் அதிகம்
முன்னதாக செய்தியாளர்களி டம் சஞ்சய் தத் கூறும்போது, “கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று வரை பிரதமர் சந்திக்க வில்லை. ஜெயலலிதா இருந்த போது பாஜகவுக்கு எதிரான நிலையை எடுத்தார். ஆனால், தற் போது அவரது பெயரால் ஆட்சி நடத்துவோர் மோடிதான் எங்கள் டாடி என்கின்றனர்.
மோடி வலிமையான தலைவர். அதனால்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஊழல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பதால்தான் மோடி வலிமையானவர் எனக் கூறுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில்தான் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகமாக இருந்துள்ளது. அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளனர்” என்றார் அவர்.