

தன்னை 'ராகுல்' என்றே அழைக்குமாறு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர், ராகுல் காந்தியை 'சார்' என அழைத்தார். உடனே ராகுல் காந்தி, "என்னை 'சார்' என அழைக்காதீர்கள், ராகுல் என அழையுங்கள்" என சிரித்துக்கொண்டே கூறினார். இதனால், உற்சாகமடைந்த மாணவிகள் தொடர்ந்து கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து, அந்த மாணவி, "ஹாய், ராகுல்" என அழைத்ததும் மீண்டும் அங்கிருந்த மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.