மக்களவைத் தேர்தல்; மார்ச் 15,16-ல் விருப்ப மனு பெறப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல்; மார்ச் 15,16-ல் விருப்ப மனு பெறப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு
Updated on
1 min read

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் போட்டியிட தமிழகத்தில் உள்ள 9 தொகுதி மற்றும் பாண்டிச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸார் 15,16 தேதிகளில் விருப்ப மனுவை அளிக்கலாம் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் பாண்டி உட்பட பத்து தொகுதிகளில் போட்டியிட உள்ளது. போட்டியிடும் 10 தொகுதிகள் என்னென்ன என்பதில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்காக தொகுதிகள் கேட்கப்படுவதால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் திமுகவுக்கு மற்ற கட்சிகளுக்கும் வேட்பாளரை அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் இன்று மாலை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் வெளிப்படையாகத் தெரியும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் விருப்ப மனு பெறுவது குறித்து அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மக்களவைத் தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 15,16- ல் விருப்ப மனுக்கள் சத்தியமூர்த்தி பவனில் பெறப்படும். பொது தொகுதிகளுக்கு ரூ.25,000, தனித் தொகுதி, பெண்களுக்கு ரூ.10,000 கட்டணத்துடன் விருப்ப மனு வழங்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in