

சென்னையில் செயல்பட்டு வரும் 108 அவசர சேவை ஆம்புலன்ஸில் பணிபுரிய மருத்துவ பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள கஸ்தூரிபாய் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இன்று (20-ம் தேதி) நடக்கிறது.
மருத்துவ உதவி பணியாளர் பதவிக்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 3 வருட அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புடன், பிளஸ்-2 வில் அறிவியல் பாடம் பயின்றிருத்தல் அவசியம். மேலும் செவிலியர் பிரிவில் 3 மற்றும் 2 ஆண்டுகள் பயின்றவர்களும் குறைந்த பட்சமாக 1 ஆண்டு (அரசு பொது மருத்துவக் கல்லூரியில் பயின்றவர்கள் மட்டும்) நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர் பணிக்கு 23 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், உயரம் 162.5 செ.மீக்கும் குறையாமல், குறைந்தது 3 வருட அனுபவம் (எல்எம்வி.யில்) ஓட்டுனர் உரிமம் பெற்று, கனரக வாகன உரிமத்திற்கான பயிற்சி / பதிவு நகல் (எல்எல்ஆர்) இருத்தல், மேலும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது தேர்ச்சி பெறாதவர். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வருதல் அவசியம்.