

தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா கூறியது: விழுப்புரத்தில் தமுமுக - மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூடி மக்களவை தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மமகவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏமாற்றம் தருகிறது.
இருப்பினும் வருகிற மக்களவை தேர்தல் நாட்டின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் பாஜக மீண்டும் வெற்றி பெறக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதச்சார் பின்மை, ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும். அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பும் கேள்விக் குறியாகும். சிறுபான்மையினர், தலித், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளின் நிலை மோசமாகும்.
ஆகவே கட்சியின் நலனைவிட நாட்டின் நலனையும், தமிழக நல னையும் கருதி மக்களவை தேர்த லில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. வரும் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் மமக போட்டியிட வாய்ப்பளிக்க திமுகவி டம் வலியுறுத்துவோம் என்றார்.