Published : 20 Feb 2019 07:35 AM
Last Updated : 20 Feb 2019 07:35 AM

சூடுபிடித்தது தமிழக தேர்தல் களம்: அதிமுக, திமுக கூட்டணியில் அடுத்தடுத்த அரங்கேறிய காட்சிகள்

மக்களவைத் தேர்தல் தேதி அறி விப்புக்கு இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வருவதாக தகவல் வெளியானது. ஆனால், கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர் அடுத்த அரை மணி நேரத்தில் காட்சிகள் மாறின.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகி கள் சென்னையில் தனியார் ஹோட்டலுக்கு வந்தனர். சற்று நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அங்கு வந்தனர். அதிமுக - பாமக தலைவர்கள் இடையே சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகு திகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படும் என ஓபிஎஸ் அறிவித்தார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாமக தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச் சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று பகல் 1 மணியள வில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக ஹோட்டலுக்கு வந்த அவர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் கேசவ விநாயகம், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் பகல் 2 மணியளவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முக்கியத் தலைவர்கள் ஹோட்டலுக்கு வந்தனர். அவர் கள் சுமார் இரண்டரை மணி நேரத் துக்கும் மேலாக பேச்சு நடத்தினர். பாஜக 7 தொகுதிகள் கேட்டு பிடி வாதம் பிடித்த நிலையில் 5 தொகுதிகளுக்கு அதிமுக உடன் பாட்டை முடித்தது. மாலை 4.50 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், அகில இந்திய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும் தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலும் போட்டியிடுவோம். 40 தொகுதி களிலும் வெல்வோம் என்றார். பின்னர் முதல்வர் பழனிசாமி இல் லத்தில் பாஜக தலைவர் களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

அதன்பிறகு சென்னை சாலிகிரா மத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற பியூஷ் கோயல், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தமிழிசை, பொன்.ராதாகிருஷ் ணன், பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் அப் போது உடனிருந்தனர். தேமுதிக வுக்கு 3 அல்லது 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள் ளது. இதனை விஜயகாந்திடம் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஆனால், விஜயகாந்த் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

திமுக கூட்டணி

அதுபோல திமுக - காங்கிரஸ் கூட்டணியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. திமுக - காங்கிரஸ் இடையே கடந்த 3 நாட்களாக டெல்லியில் நடைபெற்று வந்த தொகுதிப் பங்கீடு பேச்சு நேற்று தீவிரம் அடைந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக் கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோருடன் ராகுல் காந்தி நேற்று மாலை காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிந்ததும் ராகுல் காந்தியை மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி சந்தித்துப் பேசினார். சுமார் இரண் டரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது காங்கிரஸுக்கான தொகுதி களை ஒதுக்குவது பற்றி பேசியுள்ள னர். இந்தச் சந்திப்பின்போது ராகுல் காந்தியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து காங் கிரஸுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்திருப்பதாகவும் அதற் கான அறிவிப்பு இன்று வெளியா கும் என்றும் காங்கிரஸ் வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. இதற்காக குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ் னிக் ஆகியோர் இன்று சென்னை வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை முதல் மாலை வரை அடுத்தடுத்த அரங்கேறிய பரபரப்புகளால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x