Published : 21 Feb 2019 10:10 AM
Last Updated : 21 Feb 2019 10:10 AM

விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர், ‘விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெறும் வீரர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் 2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்’ என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவை அமைக்க கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், 63-வது தேசிய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, கடந்த அக்.16-ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்வர் கே.பழனிசாமி, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 2 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த ஜன.3-ம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு கூடியது. அப்போது, அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற் கான வழிகாட்டு நெறிமுறைகள், தகுதிகள் வகுக்கப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த தமிழக அரசு, இட ஒதுக்கீட்டுக்கான அரசா ணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழக அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் இதற்கான காலிப்பணியிடங்கள் கண்டறி யப்பட்டு, அவற்றுக்கான தகுதி கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், விளை யாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இதற்கான தகுதியான நபர் களின் பட்டியலை தேர்வுக்குழு தயாரித்து வெளியிடும். இதற் கான சட்டத்திருத்தம் விரை வில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x