ஜெயலலிதா 71-வது பிறந்த நாள்: தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம் 

ஜெயலலிதா 71-வது பிறந்த நாள்: தமிழகம் முழுவதும் 5 நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம் 
Updated on
1 min read

ஜெயலலிதாவின் 71- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் பிப்.24 முதல் 28-ம் தேதி வரை 5 நாட்கள் தமிழகம் முழு வதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப் படும் என்று அதிமுக ஒருங்கிணைப் பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம், பிப்.24-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் ஏற்கெனவே அறிவித் துள்ளனர்.

இந்நிலையில், பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் தன் வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு பிப்.24 முதல் 28-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன.

அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள் ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடக்க உள்ளன.

ஆங்காங்கே நடக்கும் பொதுக் கூட்டங்களில் கட்சியின் எம்எல்ஏக் கள் பங்கேற்று சிறப்புரையாற்றுவர். மாவட்டச் செயலார்கள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கப் பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சி களை எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் நிர்வாகிகளு டன் இணைந்து நடத்த வேண்டும்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை, படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அறிவித் துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் நடக்கும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், தி.நகரில் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி, சோழவரத் தில் அவைத் தலைவர் இ.மதுசூத னன், தாம்பரத்தில் துணை ஒருங் கிணைப்பாளர் கே.பி.முனு சாமி, பட்டுக்கோட்டையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங் கம் மற்றும் அமைச்சர் துரைக் கண்ணு ஆகியோர் பங்கேற கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in