Last Updated : 21 Feb, 2019 09:54 AM

 

Published : 21 Feb 2019 09:54 AM
Last Updated : 21 Feb 2019 09:54 AM

இன்று பன்னாட்டு தாய்மொழி நாள்: அழியும் நிலையில் 43% மொழி

பிப்.21-ம் தேதியை பன்னாட்டு தாய்மொழி நாளாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன. அதே நேரம், நாகரிக தாக்கத்தால் பழங் குடி மக்களின் பேச்சுமொழி உட்பட 43 சதவீதம் மொழிகள் அழியும் நிலையில் உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள பல் வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாது காக்க வேண்டும் என்ற நோக்கத் தில், உலகம் முழுவதும் பன் னாட்டு தாய்மொழி தினம் பிப். 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தாய் மொழியை சிறப்பாக பயில்வ துடன், தாய்மொழி வாயிலாகவே பிற மொழிகளையும் கற்கவேண் டும் என இந்த தினம் வலியுறுத்துகி றது.

உலகில் எழுத்துக்களே இல் லாமல், பேச்சளவில் உள்ள மலை வாழ் மக்களின் மொழிகளும், அவர்களின் கலாச்சாரமும் அழிந்துவரும் அபாயத்தில் உள் ளன. இதுகுறித்து, சூழல் கல்வி யாளர் டேவிட்சன் சற்குணம் கூறியது: யுனெஸ்கோ நிறுவனம், மொழியால் எவ்வித பாகுபாடும் மனிதர்களிடம் இருக்கக்கூடாது என கூறுகிறது. வளர்ந்து வரும் உலக மயமாக்கலின் செயல்பாடு களால் மொழிகள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகின்றன.

பழங்கால மொழிகள் அழிவ தால், உலகின் மிகச்சிறந்த மக்க ளின் பலவிதமான கலாச்சாரங் களும், தொன்றுதொட்டு பின் பற்றப்படும் வழக்கங்களும், சிந்தனை சக்திகளும் அழிந்து போகின்றன.

மனித கலாச்சாரம், பாரம்பரி யம், கலை, உணர்வுகளை வெளிப் படுத்தும் ஆற்றல்மிகு கருவிக ளாக தாய்மொழிகள் உள்ளன. ஆனால், உலகில் பேசப்படும் சுமார் 6 ஆயிரம் மொழிகளில் 43 சதவீதம் மொழிகள் அழியும் நிலை யில் உள்ளன. 40 சதவீதம் மக்க ளுக்கு பேசும் மொழிகளில் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட வில்லை. மலைப் பகுதிகளில் வாழும் காணி, பணியர் உட்பட பழங்குடி மக்களின் பேச்சுவழக் கில் உள்ள நூற்றுக்கும் மேற் பட்ட மொழிகள் இன்று எழுத்து வழக்கில் இல்லை.

இதனால், பழங்குடி மக்களின் மொழிகளை பாதுகாக்கும் வகை யில் 2019-ம் ஆண்டை, `பழங்குடி மக்களின் பன்னாட்டு மொழிகளின் ஆண்டு’ என, ஐக்கிய நாடுகளின் சபை பிரகடனப்படுத்தியுள்ளது. பழங்குடி மக்களின் மொழிகளை பாதுகாத்து, அவற்றை ஆவணப் படுத்தும் முயற்சியில் யுனெஸ்கோ ஈடுபட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x