Published : 17 Feb 2019 02:56 PM
Last Updated : 17 Feb 2019 02:56 PM

`யாதும் தமிழே 2019’ - சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலம்

கோவையில் ‘இந்து தமிழ்’ நடத்தும் `யாதும் தமிழே 2019’  நிகழ்ச்சியில், சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலம் என்கிற நிகழ்வு குறித்த விவாதத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தது.

கோவையில் ‘இந்து தமிழ்’ நடத்தும் `யாதும் தமிழே 2019’  நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில், கலந்து கொள்ள முடியாதது பற்றி, இயக்குநர் கவுதம் மேனன் கணொலியில் தெரிவித்ததாவது:

‘‘வணக்கம் இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் நிகழ்ச்சியில் நான் இல்லை என்கிற வருத்தம் எனக்கு உள்ளது. சென்சார் பிரச்சினை காரணமாக பங்கேற்க இயலவில்லை. அதற்காக ரொம்ப வருத்தப்படுகிறேன். அதற்காக ஆவலுடன் பேச்சு உள்ளிட்ட தயாரிப்புகளை செய்து வைத்திருந்தேன். ஒரு மாத காலமாக முன்னேற்பாடுடன் இருந்தும் பங்கேற்க இயலாததற்கு மன்னிப்பை கோருகிறேன். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா தெரியாது.அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அழையுங்கள் நிச்சயம் வருவேன்.’’ என தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தமிழின் நிகழ்காலம் என்கிற நிகழ்வு குறித்த விவாதத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தது.

வாசகர்களுக்காக விவாதம்:

நெறியாளர் ஆசைத்தம்பி: தமிழ் பல விஷயங்களை கடந்து வந்துள்ளது. கல்வெட்டு, ஓலைச்சுவடி, காகிதம் என பல வடிவம். தற்போது தொலைக்காட்சி, இணையம் என பல வடிவமாக விரிவான பல தளங்களில் சென்று சேர்ந்துள்ளது. இதற்கு இணையாக பேஸ்புக், சமூக ஊடகங்கள் புதிய நிகழ்வு. இதில் தமிழ் எப்படி ஈடுகொடுத்துக் கொண்டுள்ளது என்பது குறித்த விவாதம்.

விவாதத்தில் கலந்துக்கொண்டோர்: பேரா.ராஜன், எழுத்தாளர் அராத்து, பாலசுப்ரமண்யம் பொன்ராஜ், எழுத்தாளர் நவீனா, நெறியாளர் ஆசைத்தம்பி

ராஜன்: சமூக ஊடகம் என்கிற பயணத்தை சமூக இல்லாத ஊடகம், ஊடகம் இல்லாத கிடையாது. ஆகவே இதை எப்படி பிரித்துப்பார்ப்பது. 2 விஷயமாக பார்க்கலாம். பூகோள ரீதியாக பூமிப்பரப்பு, அதை அப்படியே பார்ப்பது ஆபத்து. சமூகம் எப்போதும் வலைப்பினலாகத்தான் உள்ளது.

ஊரில் உள்ள ஓவொருவருக்கும் வேறு வேறு நபர்களுடன் வெவ்வேறு தொடர்புகள் இருக்கும். பரப்பா, வலைப்பின்னலா என்று எடுத்துக்கொண்டால் மென்பொருளில் சொல்கிறோமே இது தொழில் நுட்பத்தால் ஆன புதிதான வலைப்பின்னல் என்பேன்.

இது மிகப்பெரிய சாதனை. முகநூல் மிகப்பெரிய விஷயத்தை எனக்கு கொடுத்துள்ளது. அதில் மிகப்பெரிய வலைப்பின்னல் உள்ளது. பழைய அம்சங்களாக எனக்கு படுகிறது.

எதுவாக இருந்தாலும் மனித வாழ்வை திருப்பிப்பார்க்கும், பகிறக்கூடிய நிகழ்வாக அதை தொடரும் நிகழ்வாக நடப்பதாக பார்க்கிறேன். அதில் தமிழின் நிலைப்பாடு இரண்டுவித குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஹீமோஜி போன்ற வடிவங்கள் மொழி வளர்ச்சியை பாதிக்கிறது. இரண்டு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் ஆங்கிலம் கலப்பாக மொழியின் தன்மையை மாற்றுகிறது என்கிற குற்றச்சாட்டாக உள்ளது.

சித்திர வடிவங்கள் நமக்கு புதிய விஷயமல்ல. சிற்பங்கள், கல்வெட்டுகள் அதைத்தான் சொன்னது. ஆகவே வடிவங்கள் வார்த்தைகளாகத்தான் புரிந்துக்கொள்ளப்படும்.

இரண்டாவது வார்த்தைகள் சோஷியல் மீடியாவால் மாறவில்லை, சங்கக்கால வார்த்தைகளை நாம் இப்போது பயன்படுத்துவதில்லை. அப்போது சோஷியல் மீடியா இருந்ததில்லை. ஆகவே சமூகத்தின் பிரதிபலிப்பே வார்த்தைகள் மாறுவதில் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன்.

சமூக வலைதளத்தில் எழுதும் கிரிட்டிக் கவிதைகள் தாராளமாக வரவேண்டும். விமர்சனம் இருக்கலாம், அதற்காக சோஷியல் மீடியாவில் எழுதவே கூடாது என்று சொல்லக்கூடாது.

அராத்து: நம் தமிழுக்கு முன்னாடி திருக்குறள் இருந்தது இரண்டே வரிதான். ஆனால் தற்போது வளவளவென்று எழுதுவதும் பேசுவதும் உள்ளது. இது எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை.

இந்த சிக்கல் எல்லா இடத்திலும் உள்ளது. யாரைப்பார்த்தாலும் பேசிக் கொல்கிறார்கள் எழுதிக்கொல்கிறார்கள் என்பது என் குற்றச்சாட்டு. தமிழ் மொழி தொடர்புக்கு அருமையான மொழி சுருக்கமாக பயன்படுத்தலாம். தமிழ் பரந்த மொழி என்பதை வைத்து பெரிதாக எழுதியதை தற்போதுள்ள பேஸ்புக், ட்விட்டர் குறைத்துவிட்டது.

இந்த வகையில் சோஷியல் மீடியா தமிழை தொடர்பு மொழியாக மாற்றி வருகிறது.

சமூக ஊடகத்தில் இல்லை என்பது மிகப்பெரிய தகுதி. 6 ஆண்டுகள் முகநூலில் இருந்தேன். ஆறாண்டுகளில் என்னையே நான் கவனித்த விஷயம் சமூக ஊடகங்கள் வரவுக்கு பின் மனிதனுக்கும் ஊடகங்களுக்கும் வித்யாசம் இல்லாமல் போனது. நானே ஊடகமாக மாறிப்போனேன். நாமே வலைப்பின்னாலாக மாறிப்போனோம்.

நான் ஒரு ஊடகமல்ல சராசரி மனிதன் என நினைத்தபோதுதான் நான் முகநூலிலிருந்து வெளியே வந்தேன். நினைவுத்திறனுக்கு பெரிய எதிரியாக இருப்பது சமூக ஊடகங்கள்தான்.

என்னுடைய பிம்பத்தை பார்க்க டயர்டாக உள்ளது. முக்கியமான விஷயங்கள் ஒரு தேனி மலரிலிருந்து தேனை எடுப்பதிலிருந்து காணாமல் போய்விடும். என்னுடைய மனநிலை ஏதாவது ஒரு விஷயத்தில் எதிர்வினை ஆற்ற நினைக்கிறது.

கற்பனையான சமூகத்தில் நாம் முக்கியமான ஆட்கள் என்று நினைக்கிறோம். நாம் யாரும் முக்கியமல்ல நாம் பொருட்களே. நம் பிம்பத்தையே தொடர்ந்துப்பார்த்து நம்மை மிகப்பெரிய நாஜிஸ்டாக மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என பதிவு செய்து முக நூலிலிருந்து விலகினேன்.

ராஜன்: நான் என்னை ஊடகமாக மாற்றிக்கொள்கிறேன் என முகநூலில் இருப்பதை மட்டுமே அவர் குறிப்பிடுகிறார். ஆனால் நாம் எப்போதுமே ஊடகமாகத்தான் இருக்கிறோம், உடை, மொழி பேசுவது.

நாஜிசம் என்பதில் உடன்பாடு இல்லை. நம்மை நாம் ரசிக்கும்போதுதான் நல்ல படைப்புகளை தர முடியும். நாஜிசத்தை கண்டு பயந்து எங்கே போகப்போகிறோம். எது எல்லாம் சமூகத்தில் அமிலங்களாக இருக்கிறதோ அதை சோஷியல் மீடியா வெளிப்படுத்துவது பலம்.

முகநூலில் நாம் நேரில் சந்திக்க முடியாதபோதுகூட பல விஷயங்களை விவாதிக்க வாய்ப்பு உள்ளது.

நெறியாளர்: பெண்கள்சோஷியல் மீடியாவில் வரும்போது என்ன பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள் 

நவீனா: முன்பு செல்போன் வருவதற்கு முன் லேண்ட்லைன் இருந்தபோது சொந்தபந்தங்கள் நம்பரை எல்லாம் ஞாபகம்வைத்திருந்தோம். ஆனால் செல்போன் வந்தப்பின் நம்முடைய எண் கூட ஞாபகத்தில் இல்லை. இதற்கு சோஷியல் மீடியாத்தான் காரணமா என்றால் இல்லை.

பெண்கள் சோஷியல் மீடியாவில்தான் பிரச்சினை சந்திக்கிறார்கள். போட்டோ எடுத்து மார்பிங் செய்வதுபோன்று பசங்களுக்கும் பல பிரச்சினை உள்ளது. ஆகவே பிரித்துப்பார்க்க முடியாது.

முதல் பிரச்சினை மார்பிங், அது சோஷியல் மீடியாவில் மட்டும் இல்லை, ஒரு செல்பி எடுக்கும்போதுகூட எடுத்து மார்பிங் செய்யலாம்,.

அதேபோன்று பெண்கள் எழுதுவதற்கு வாய்ப்பு முகநூலில் கிடைக்கிறது. நேரடியாக எழுத முடியாதவர்கள் பேக் ஐடியில் எழுதவும் வாய்ப்பு உள்ளது.

அராத்து: எந்த ஒரு புதிய விஞ்ஞான முன்னேற்றத்திலும் பிரச்சிகள் உண்டுத்தான். உதாரணமாக மின்சாரம் வந்தபோது நம்முடைய தூங்கும் நேரம் குறைந்தது. போன் வந்தபோது அதுவும் நம் நேரத்தை எடுத்துக்கொண்டது. தற்போது பல வரவுகள் வந்துள்ளது. இதை எப்படி பார்க்கவேண்டும் சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் மாற்றத்துக்கு ஏற்றார்போல் மாறுவது.

அதை எப்படி பார்க்கவேண்டும் என்றால் இதை விட்டு ஒதுங்க முடியாது. நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைவிட இளைய சமுதாயம் நம் வீட்டு பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகத்தான் நாம் அதை பயன் படுத்தவேண்டும். நாம் அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதாக இதைப்பார்க்கவேண்டும்.

இதை பார்ப்பதில் பலருக்கும் பலவித பயங்கள் அவர்வர் வாழ்க்கையை ஒட்டி எழுகிறது. நெகட்டிவான விஷயங்களை தவிர்த்து வானளாவிய பல விஷயங்கள் உள்ளது.

பால இந்தியாவில் எப்படி மைனாரிட்டிகள் உள்ளதுபோன்று நான் இப்ப மைனாரிட்டியாக இருக்கிறேன். விலகி இருத்தல் என்பது முற்றிலும் துறவு நிலை கிடையாது. நான் உரவுகள் நண்பர்களுடன் உறவில்தான் இருக்கிறேன். அமைதியாக இருத்தல் மவுனமாக இருத்தல் நெஅக்ட்டிவிட்டி இல்லை என்று நினைக்கிறேன்.

அனைத்து விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளவேண்டும், எதிர்வினையாற்ற வேண்டும் என்பது நல்லதல்ல.

சில பேர் மொபைலையே பயன்படுத்த மாட்டேன் என்று இருப்பார்கள். தனித்தீவில் நம் இஷ்டத்துக்கு வாழலாம். நான் சோஷியல் மீடியாவில் இல்லை அவ்வளவுதான், அதற்காக இவ்வளவு முன்னுரை தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

ராஜன்: சமூக ஊடகம் என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதைத்தான் பார்க்கணும். அங்கு ஒரு மிகப்பெரிய அம்சம் உள்ளது. நாம் 21-ம் நூற்றாண்டு பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். அதற்கு இந்த வலைப்பின்னல் உதவும். எனக்கு பிடிக்காமல் ஒருத்தர் எழுதினால் நான் பிளாக் செய்துவிட்டு போகிறேன். ஆனால் ஒரு குழுவாக உருவாக முகநூல் உதவுகிறது.

நாம் என்ன நினைக்கிறோம் நம்மை லைக் செய்யணும், ஷேர் செய்யணும் என்று ஆசைப்படுகிறோம், அன்று ஊர் ஊராக சென்று நண்பர்களை சந்தித்தோம். இன்று உட்கார்ந்த இடத்தில் நமக்கான குழுவை உருவாக்க முடியும்.

நவீனா: சிலர் விலகி இருப்பதாக சமூகத்துக்காக காட்டிக்கொண்டு அதைப்பற்றியே நினைப்பவர்களைத்தான் பார்க்கிறேன்,

அராத்து: சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் அதிலேயே மூழ்கி கிடக்கிறார்கள் என்ற குற்றாச்சாட்டு இருந்திருக்கும், ஆனால் இதற்கு முன் அவர்கள் என்ன செய்தார்கள் தூங்கியிருப்பார்கள், அதிகம் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் முகநூல் அதை மாற்றியுள்ளது.

முன்பெல்லாம் ஒரு பெண்ணை அழகாக இருக்கிறாய் என்று சொன்னால் ஐ லவ்யூ என்று அர்த்தம். ஆனால் இப்ப அப்படி இல்லை ஒரு லைக் போட்டால் அந்தப்பெண் பதிலுக்கு ஹ்கார்ட் லைக் போடுவார் இதெல்லாம் சாதாரணமாகி உறவுகளில் ஒரு மேம்பாட்டை வளர்த்துள்ளது.

பாலசுப்ரமணி: நான் சாதிக்கலவரத்தைக் குறித்து எழுதிய பதிவை நண்பர்கள் எடுத்துவிடச் சொன்னார்கள். காரணம் என் பெயரை எடுத்துவிட்டு வேறு யாராவது பெயரைபோட்டு பதிவு செய்வார்கள் என்று சொன்னதால் எடுத்துவிட்டேன். ஆகவே நான் நினைப்பதை எழுத சுதந்திரம் இல்லாததுதான் முகநூல்.

யாரும் நினைப்பதை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. பலரும் முக நூலில் சுதந்திரமாக எழுதுவதில்லை.

அராத்து: அன்று மனிதர்களுக்கான மதிப்பு இருந்தது. ஆனால் இன்று ஒரு தனிமனித மீறல்கூட உடனடியாக சமூக ஊடகங்கள் மூலம் வெளி வந்து தீர்வுக்காணப்படுகிறது.

வெறுப்பு எளிமையாக சோஷியல் மீடியாமூலம் பரவுகிறது என்ற குற்றச்சாட்டு குறித்து?

வெறுப்பு, அன்பு எல்லாகாலங்களிலும் உண்டு. விட்டுக்கொடுத்தல், சக வாழ்வு எல்லா காலத்திலும் உண்டு. சோஷியல் மீடியா பற்றி மட்டும் சொல்ல முடியாது. இது வித்யாசமாக என்னென்ன செய்கிறது என்பதை கவனிக்கவேண்டும். சர்க்குலேஷன் அதன் தொழில் நுட்ப வேகம் வெறுப்பு 5 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது 50 கில்லோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அன்பும் அப்படித்தானே அதே வேகத்தில் போகும். ஆகவே நம்மிடம் எது இருக்கிறதோ அதுதான் வெளிப்படுகிறது.

பெஞ்சமின் கோட்பாட்டை எப்படி பார்க்கிறோம். அவர்கள் இந்த மாற்றங்களை எல்லாம் புதிய மாற்றங்களாக உடைப்புகளாக பார்க்கிறார்.தொடர்பு படுத்துவதிலும் ஒரு எதிக்ஸ் இருக்கவேண்டும். கோபம் இருக்கிறது என்பதற்காக தணிக்கை இல்லாமல் பேச முடியுமா?

பல ஊர்களில் நான் செல்லும்போது நன்றாக முகநூலில் எழுதுவதாக நண்பர்கள் கூறுகிறார்கள். ஒரு நண்பர் அவரை நான் பார்த்ததே இல்லை நல்ல நண்பராக இருக்கிறார். அதை முகநூல்தானே சாத்தியமாக்கி உள்ளது.

நாம் பார்க்கவேண்டியது இதில் என்ன வகையான ஆபத்து உள்ளது. என்கிற பயிற்சி வேண்டும். வாழ்க்கையே பயிற்சித்தானே.

நவீனா:முகநூல் தவறான விஷயங்களை கொண்டுச்செல்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். மெரினா புரட்ட்சியை எடுத்துக்கொள்ளுங்கள் அதை வெற்றிகரமாக கொண்டுச் சென்றது சோஷியல் மீடியாவால்தான்,

சிஆர்பிஎப் குண்டுவெடிப்பில் சவலப்பேரி சுப்ரமணி இறந்ததை உடனடியாக தகவலாக வெளிவந்தது. ஆனால் அவரது இறப்பை உடனடியாக வெளிக்கொண்டுவந்தது சோஷியல் மீடியாத்தான்.

சோஷியல் மீடியா முகம் தெரியாதவர்களையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகத்தான் உள்ளது.

அராத்து: எழுதுகிறவர்கள், படிக்கிறவர்கள் அறிவாளிகள் பயன்படுத்தும் மொழி ஒன்று இருக்கும். மக்கள் பயன்படுத்தும்  மொழி ஒன்று இருக்கும். இதை வாசகர்கள் படித்து படித்து அறிவாளிகள் அளவுக்கு பதிவுக்கு உயர்ந்துள்ளதை பார்க்கிறோம்.

நம்மால் முழு சுதந்திரத்துடன் இயங்க முடிகிறதா என எக்ஸ்ட்ரீமாக பார்க்கக்கூடாது. சோஷியல் மீடியாவில் முழுச் சுதந்திரத்துடன் இயங்க முடியவில்லை என்று கூறினால் வெளியில் அந்த சுதந்திரம் உள்ளதா? என்பது கேள்வி.

நாம் நினைப்பதை எல்லாம் எழுதிவிட முடியாது. நாம் அதிகப்பட்சம் ஜாலியான பக்கத்தை நண்பர்களிடம் மட்டுமே வெளிப்படுத்த முடியும். இவ்வாறு பெற்றோர், பெண்களிடம் நின்பைத்ததை வெளிப்படுத்த முடியாத நாம் சோஷியல் மீடியாவில்மட்டும் சுதந்திரம் இல்லை என்று கூறலாமா?

சமூகத்துக்கு எதிர்காலம் இருக்கு, சோஷியல் மீடியாக்கும் எதிர்காலம் இருக்கு, நாம் சோஷிஒயல் மீடியாவில் முகநூலைப்பற்றி மட்டுமே பார்க்கிறோம், ஆனால் டிக்டாக், இன்ஸ்டாகிராமில் என்ன மொழி வளரப்போகிறது என்று தெரியவில்லை.

ராஜன்: வியாட்நாம் போர் குறித்து நாம் எழுதமுடிந்த காலக்கட்டம் இன்று இல்லை காரணம் மீடியா முழுதும் தனிநபர் கைகளில் சென்றுவிட்டது. தற்போது தனிநபர் உறவு மற்ற விஷயங்களை பார்க்கும்போது மையங்களும் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கும்போது அதற்கு எதிரான வலைப்பின்னல்களும் வரத்தான் செய்யும் அப்படித்தான் சோஷியல் மீடியாக்களை பார்க்கிறோம். புதிய சாத்தியங்கள் காலப்போக்கில் வரும், வரவில்லை என்றாலும் அதுவும் நமது தோல்விதான்.

நவீனா: எந்த விஷயத்திலும் நெகட்டிவ் பாசிட்டிவ் உண்டு. போகப்போக எதிர்காலத்தில் சோஷியல் மீடியா மக்களுடை மனநிலையைப்பொருத்து நெகட்டிவாக அல்லது பாசிட்டிவாக மாறும். ஆனால் நாம் அழிந்துபோக மாட்டோம், தோல்வி அடைவோம் அவ்வளவுதான். முகநூல் ஸ்டீரியோ டைப்பை ஒழிக்கிறது. சில எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் சமூகத்தால் ஒளித்து வைக்கப்பட்டிருந்தார்கள், ஆனால் அவர்களை சோஷியல் மீடியா வெளிக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அங்கீகாரத்தை பலருக்கும் சோஷியல் மீடியா கொண்டுவரும்

அராத்து: தமிழ் எழுத்தாளர் என்றால் அவர் பாரம்பரிய இடத்திலிருந்துத்தான் வரணும் என்கிற எண்ணத்தை, மரபை முகநூல் ஒழித்தது.

ஆசைத்தம்பி: சமூக ஊடகங்களை உருப்படியாக எதையும் செய்ய முடியாது என்கிற எண்ணம் எனக்கும் இருந்தாலும் அதை வைத்து உருப்படியான விவாதத்தை செய்யுமுடியும் என்றால் அதில் எனக்கும் நம்பிக்கை வந்துள்ளது.

சிறப்பு விருந்தினர்களுக்கு கோவை விளம்பரப்பிரிவு நிர்வாகி செந்தில், செய்தியாளர் சக்திவேல். கௌசிக், காமதேனு செய்தியாளர் கா.சு.வேலாயுதம் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x