5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ‘மாநில மேடை’ அமைப்பு கோரிக்கை

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவை கைவிட வேண்டும்: ‘மாநில மேடை’ அமைப்பு கோரிக்கை
Updated on
1 min read

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுசெயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளி யிட்ட அறிக்கை:

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்திருத்தத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தரப்பட்டுள்ளது. எனினும், 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த உத்தேசித்து தமிழக அரசு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை என பல்வேறு குறைகள் உள்ளன.

இந்தச் சூழலில் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து, சரிசெய்து அவர்கள் படிப்பதற்கு உகந்த சூழலை அமைத்துத் தருவதே சிறப்பு. அதற்கு மாற்றாக கற்றல் குறைபாட்டுக்கு மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் என கூறுவது நியாயமற்றது.

இடைநிற்றல் அதிகரிக்கும்

ஏனெனில், தேர்வு குறித்த புரிதல் இல்லாத குழந்தைப் பருவத்தில் பொதுத்தேர்வு, அதில் தேர்ச்சி இல்லை எனில் உடனடித்தேர்வு, அதிலும் தேர்ச்சியில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்பது குழந்தை கள் மீது நடத்தப்படும் வன்முறை யாகும். எளிய மக்களின் குழந்தை களை, குறிப்பாக பெண் குழந்தை களை இத்தகைய முடிவுகள் பெரிதும் பாதிக்கும். மாணவர்க ளின் இடைநிற்றல் அதிகரிக்கும்.

எனவே, 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த உத் தேசித்துள்ள பொதுத்தேர்வை கைவிட வேண்டும் என்று தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in