

பாஜக வின் மாநிலத்தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் புதனன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை கடற்படையினரால் இராமேசுவரம் மீனவர்கள் கொடூரமான முறையில் தாக்கப் பட்டுள்ளதை தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. இலங்கை கடற்படையினரின் இந்த செயல் காட்டு மிராண்டித்தனமானது. இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் மீனவர்கள் பிரச்சனையில் தீர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசு இருப்பதையே இது காட்டுகிறது.
மத்திய அரசு உடனடியாக தமிழ் மீனவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.