Published : 20 Feb 2019 07:27 AM
Last Updated : 20 Feb 2019 07:27 AM

ஜெயலலிதாவை மிஞ்சிய அதிமுக தலைமை

கூட்டணி தொகுதிப் பங்கீடு விஷ யத்தில் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் தற்போதைய அதிமுக தலைமை செயல்பட்டுள்ளது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பிளவுபட்டிருந்த அதிமுக, பின்னர் ஜெயலலிதா தலைமையில் ஒருங் கிணைந்து 1991-ம் ஆண்டு மக்க ளவை, சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்தித்தது. அப்போது 11 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகளை காங்கிர ஸுக்கு ஒதுக்கியது. அதேநேரத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பொறுத்தவரை அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டது. 1996 தேர்தலிலும் இதே தொகுதிப் பங் கீட்டின்படி அதிமுக - காங்கிரஸ் போட்டியிட்டது.

1998 தேர்தலில் பாஜக 6, பாமக 5, மதிமுக 5, சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி 1, வாழப் பாடி ராமமூர்த்தியின் ராஜீவ் காங் கிரஸ் 1 என கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு அதிமுக 22-ல் போட்டியிட்டது. 1999-ல் அதிமுக 29 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதி களை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு ஒதுக்கியது.

2004-ல் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டது. புதுச்சேரி உட்பட 7 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியது. 2009-ல் அதிமுக 23-ல் போட்டியிட்டது. பாமக 6, மதிமுக 4, மார்க்சிஸ்ட் 3, இந்திய கம்யூனிஸ்ட் 3 என கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2014-ல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்துப் போட்டியிட்டது.

ஜெயலலிதா இல்லாதது பாஜக- வுடனான கூட்டணி பேரத்தில் அதிமுக தலைமைக்கு பலவீ னத்தை உண்டாக்கி, கூடுதல் தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு விட்டுத் தர வேண்டிய நிலை வரக்கூடும் என்ற கருத்து நிலவி வந்தது.

இந்நிலையில், பாஜக-வுக்கு ஜெயலலிதா கொடுத்ததை விடக் குறைவாக, 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி, அதேசமயம் வாக்கு வங்கிக் கணக்கு அடிப்படையில் பாமக-வுக்கு கூடுதலாக 2 தொகுதிகளையும் ஒதுக்கியதன் மூலம் எதிர்க்கட்சி வட்டாரங் களில் ஆச்சரிய அலைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது அதிமுக தலைமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x