ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளாக தரம் உயரும்: சட்டப்பேரவையில் சிறப்பு சட்ட மசோதா தாக்கல்

ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளாக தரம் உயரும்: சட்டப்பேரவையில் சிறப்பு சட்ட மசோதா தாக்கல்
Updated on
1 min read

ஓசூர் மற்றும் நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சிறப்பு சட்ட மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இந்நிலையில், கடந்த 2017 செப்டம் பர் 23-ம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘மக்கள் தொகை அதிகரித்தல், ஆண்டு வருமானத்தில் முன்னேற்றம், மக்கள்தொகை பெருக்கத் துக்கு ஏற்ப அடிப்படை தேவை களை பூர்த்தி செய்வதை முன் னிட்டு வகை செய்யப்பட வேண் டிய குடிநீர் பணிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்’’ என்று அறிவித்தார்.

அதேபோல், கடந்த ஆண்டு செப். 22-ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், ‘‘மறுவரையறை ஆணையத்தால் செய்யப்படும் எல்லை மறுவரை யறைகள் முடிந்தபின், நாகர் கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்’’ என்று அறிவித்தார். முதல்வரின் அறி விப்புகளையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை யினர் முதல்கட்ட அடிப்படை பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஒசூர், நாகர் கோவில் நகராட்சிகளை மாநகராட்சி களாகதரம் உயர்த்துவதற்கு, கோவை மாநகராட்சி சட்டத்தின் வரைமுறைகளை தழுவி சிறப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை சட்டப்பேரவை யில் உள்ளாட்சித் துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தாக் கல் செய்தார். அதில் கூறியிருப்ப தாவது:

இந்த சிறப்பு சட்டத்தின்படி, தற்போது நகரட்சிக்கு உட்பட்ட பகுதிகள், மாநகராட்சியின் எல் லைக்குள் வருகின்றன. நகராட்சி யில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் மாநகராட்சியின் அலுவலர்களாக மாற்றப்படுகின் றனர். இதனால், மாநகராட்சியின் பணி வரையறைக்குள் அவர்கள் வருகின்றனர். நகராட்சிக்கான வாக்காளர் பட்டியல் மாநகராட்சிக் கான புதிய வாக்காளர் பட்டி யல் தயாரிக்கப்படும் வரை, மாற்றப்படாமல் இருக்கும்.

மாநகராட்சி மன்றம், நிலைக் குழு, ஆணையர் மற்றும் பல்வேறு குழுக்களின் அதிகாரங்களை செலுத்த, கடமைகளைச் செய்ய தனி அலுவலர் நியமிக்கப்பட வேண் டும். புதிய தனி அலுவலர் நியமிக் கப்படும்வரை, நகராட்சியின் தனி அலுவலராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர், மாநகராட்சியின் தனி அலுவலராக கருதப்படுவார். தேர்தலுக்குப் பின் அமைக்கப்படும் முதல் கூட்டம் வரை தனி அலுவலர் பணியாற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்த சிறப்பு சட்ட மசோதா, பேரவையில் இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறை வேற்றப்படும். தொடர்ந்து, குடி யரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in