Published : 19 Feb 2019 08:42 AM
Last Updated : 19 Feb 2019 08:42 AM

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி உள்ளிட்ட 56 பேர் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுக்கு தேர்வு: முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று வழங்குகிறார்

கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கு முதல்வர் கணினித்தமிழ் விருது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி இன்று வழங்குகிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழுக்கும் தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றுவோருக்கு கடந்த 2012 முதல் 2016 வரை 55 விருதுகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி வழங்கினார். தற்போது முதல்வர் பழனிசாமி கடந்த 2017-18ம் ஆண்டில், பல்வேறு நோக்கில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், 2018-19ம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் அயோத்தி தாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருது களை அறிவித்தார்.

இந்தவகையில், 2019-ம் ஆண்டில் மறைமலை அடிகளார், அயோத்திதாச பண்டிதர் விருது வழங்கப்படுவதாக அமைந் துள்ளதால், அதை விடுத்து, 2018-ம் ஆண்டுக்கு சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருது கள் பெறும் 56 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தாய் விருது- புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், கபிலர் விருது -புலவர் மி. காசுமான், உ.வே.சா. விருது -நடன. காசிநாதன், கம்பர் விருது- க. முருகேசன், சொல்லின் செல்வர் விருது- ஆவடி குமார், ஜி.யு.போப் விருது- கு.கோ. சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது- சா.நசீமாபானு ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

அதே போல், இளங்கோவடிகள் விருது -சிலம்பொலி சு.செல்லப்பன், அம்மா இலக்கிய விருது - உலகநாயகி பழனி, சிங்காரவேலர் விருது - பா. வீரமணி, மற் றும் 2017-ம் ஆண்டுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருது வை.மதன் கார்க்கி (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை)க்கும் வழங்கப்பட உள்ளன.

இதில், தமிழ்த்தாய் விருது பெறும் புவனேஷ்வர் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுக் கேடயம், சான்றிதழ் வழங்கப்படும். மற்ற விருதுகள் பெறுவோருக்கு ரூ.1 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், பொன்னாடை, தகுதியுரை வழங்கப்படும்.

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

மேலும், 2018-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, மு. சீனிவாசன், ஜி. குப்புசாமி, மருத்துவர் சே. அக்பர்கவுசர், ராஜலட்சுமி சீனிவாசன், செ. செந்தில் குமார் (எ)  கிரிதாரிதாஸ், பழனி. அரங்கசாமி, எஸ். சங்கரநாராயணன், செல்வி ச. நிலா ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

தமிழ்ச்சங்க விருது

மேலும், 2018-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது- டென்மார்க்கைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்ஸைச் சேர்ந்த கி.பாரதிதாசன், மொழியியல் விருது -பிரான்ஸைச் சேர்ந்த ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளை பெறுவோருக்கு ரூ.1 லட்சம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

மேலும், 32 மாவட்டங்களிலும் தமிழ்ப்பணி ஆற்றுவோருக்கு, தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, யு.எஸ்.எஸ்ஆர். கோ. நடராசன் (சென்னை), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர்), இதயகீதம் அ.இராமானுசம் (காஞ்சிபுரம்), ப.சிவராஜி (வேலூர்), ஆ. கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி), க. சம்பந்தம் (திருவண்ணாமலை), செ.வ.மதிவாணன் (விழுப்புரம்), இரா. சஞ்சீவிராயர் (கடலூர்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர்), அ. ஆறுமுகம் (அரியலூர்) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

ஆ. கணபதி (சேலம்), பொ. பொன்னு ரங்கன் (தருமபுரி), சி.தியாகராசன் (நாமக் கல்), வெ. திருமூர்த்தி (ஈரோடு), கவிமாமணி வெ. கருவைவேணு (கரூர்), மா. நடராசன் (கோவை), மு. தண்டபாணிசிவம் (திருப் பூர்), சோ. கந்தசாமி (நீலகிரி), வீ. கோவிந்தசாமி (திருச்சி), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை), சே. குமரப்பன் (சிவகங்கை), த. உடையார்கோயில் குணா (தஞ்சாவூர்), கவிஞர் நா. சக்தி மைந்தன் (திருவாரூர்) ஆகியோருக்கும் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது.

மேலும், புலவர் மு. மணி மேகலை (நாகை), க. சுப்பையா (இராம நாதபுரம்), சு. லக்குமணசுவாமி (மதுரை), வதிலைபிரபா (திண்டுக்கல்), சு. குப்புசாமி (தேனி), க. அழகர் (விருதுநகர்), கவிஞர் பே.இராசேந்திரன் (நெல்லை), ப. ஜான் கணேஷ் (தூத்துக்குடி), கா. ஆபத்துக் காத்தபிள்ளை (கன்னியாகுமரி) ஆகியோ ருக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப் படுகிறது. இந்த விருதுடன் ரூ.25 ஆயிரம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இந்த 56 விருதுகளும் தலைமைச் செயலகத்தில் பிப்.19-ம் தேதி (இன்று) முதல்வர் கே.பழனிசாமி வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x