ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்: வைகோ

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்: வைகோ
Updated on
1 min read

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு அதிமுக அரசுதான் காரணம் என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் கிடையாது. இதனால் ஏகப்பட்ட நஷ்டம் அடைந்து விட்டதாகக் கூறுகிறார்கள். மோசமான காப்பர் வோர் எங்க இருக்கோ அங்கேயிருந்து வாங்குகிறார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்குகிறார்கள்.

லத்தீன் அமெரிக்காவிலிருந்து உயர்தர தாமிரம் கிடைக்கிறது ஆனால் அதை வாங்குவதில்லை. இதிலிருந்து வரும் வாயுவிலிருந்து தங்கம் வெள்ளியை உருக்கி எடுக்கிறார்கள். ஆனால் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆர்சனிக் லெட் காமியம் அதெல்லாம் எவ்வளவு பரவு எனும்போது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறதல்லவா?

தீர்ப்பு வந்து ஒருவாரத்திலோ இரண்டு வாரத்திலோ வரலாம் ஆனால் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன் இந்த ஆலை திறக்கப்பட்டால்... நான் வழக்கறிஞர்களை குறை சொல்லவில்லை, நீதிபதிகளை குறைசொல்லவில்லை, இந்த ஆலை திறக்கப்பட்டால் நூற்றுக்கு நூறு தமிழ்நாடு அரசுதான் காரணம்.

இவ்வாறு கூறினார் வைகோ.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in