விவிஐபி செல்லில் ஜெயலலிதா; கைதி எண். 7402

விவிஐபி செல்லில் ஜெயலலிதா; கைதி எண். 7402
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைதி எண். 7402.

பெண்கள் சிறைக்கு அருகில் இவரது செல் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் தனி பாத்ரூம் வசதிகள் உண்டு. குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது.

அவரது இரவு உணவு ராகி உருண்டை, 200 கிராம் சாதம், மற்றும் 2 சப்பாத்திகள். ஆனால் இது வேண்டாம் என்று பழங்கள் வாங்கி சாப்பிட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரு முறையே கைதி எண் 7403, 7404, 7405 ஆகியன வழங்கப்பட்டுள்ளது. சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டனர்.

சுதாகரனுக்கு முன்னாள் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சரும் சுரங்க தாதாவுமான ஜனார்தன் ரெட்டி இருக்கும் அறைக்கு அடுத்த விஐபி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

உடல் நிலை பற்றி ஜெயலலிதா புகார் எழுப்ப அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர்பாதுகாப்பு மத்திய சிறையான இங்கு விவிஐபி செல்லில் உள்ளே செல்லும் முதல் நபர் ஜெயலலிதா ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in