Published : 28 Feb 2019 06:20 PM
Last Updated : 28 Feb 2019 06:20 PM

பாக். பிரதமர் இம்ரான் கானிடமிருந்து நம் பிரதமர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: குஷ்பு

அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததையடுத்து இம்ரான் கானுக்கு பல தரப்புகளிலிருந்தும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக நேற்று, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

 

விமானத்தில் இருந்த தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

 

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்'' என்று அறிவித்துள்ளார்.

 

இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகள் இட்டுள்ளார்... அவையாவன:

 

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

இன்னொரு ட்வீட்டில், “விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களே நீங்கள் தாய்நாடு திரும்புவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். இம்ரான் கானின் அன்பான செய்கைக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

— KhushbuSundar..A proud INDIAN despite bng a Muslim (@khushsundar) February 28, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x