இந்து முன்னணி அலுவலகத்துக்கு மீண்டும் மிரட்டல்

இந்து முன்னணி அலுவலகத்துக்கு மீண்டும் மிரட்டல்
Updated on
1 min read

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத் துக்கு மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு சில நாட்க ளுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. தமிழகத் தின் பல பகுதிகளிலும் கொலை செய்யப்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த சிலரது பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான், இந்து முன்னணி நிர்வாகிகள் சிலருக்கு ஏற்படும் என்று கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் சிலரது பெயர்களை குறிப்பிட் டும் கொலை மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.

இதுகுறித்து இந்து முன்னணியின் சென்னை மாநகர பொரு ளாளர் எஸ்.எஸ்.முருகேசன் சென்னை காவல் ஆணையர் அலுவ லகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in