லிங்கா படம் போல் சில படங்கள் வந்தது தெரியாமல் போய் விடும்-  ரஜினியை கிண்டலடித்த திமுக எம்.எல்.ஏ.

லிங்கா படம் போல் சில படங்கள் வந்தது தெரியாமல் போய் விடும்-  ரஜினியை கிண்டலடித்த திமுக எம்.எல்.ஏ.

Published on

எல்லா படமும்  ‘பேட்ட’ படம் போல் வெற்றி பெறாது... லிங்கா மாதிரி சில படங்கள் வந்தது தெரியாமல் போய் விடும் என்று மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததை வைத்து திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கிண்டலடித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் ஜெயக்குமார் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற ஜெ.அன்பழகன் பேசும்போது, ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று சொன்னார், ஏதோ தமிழ்நாட்டில் அவரை விட்டால் ஆளில்லை என்பது போல் சினிமாப் படம் ஓடுவது போல அரசியலும் ஓடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் நான் நிற்கப்போவதில்லை என்று  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்ததாக எப்போது வருவார் என்றால் சட்டமன்றத் தேர்தலின் போது வருவார், அதாவது சினிமாப் படம் வரும் பாருங்கள் அதாவது பேட்ட படம் வந்துதுல்ல அதுமாதிரி, அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் பேட்ட மாதிரி எல்லாப் படமும் ஓடும் என்று லிங்கா மாதிரி படமும் தோல்வி அடைந்திருக்கிறது.

காந்தியே கிராமசபைக் கூட்டத்தை தம்மைப் பார்த்துதான் கற்றுக் கொண்டதாக  கமல் கூறினாலும் கூறுவார்.

திமுக கூட்டணியில் இடம் கொடுக்கவில்லை என்பதால் கமல் இப்போது திமுகவை விமர்சிக்கிறார்., என்று ஜெ.அன்பழகன் பேசியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in