Last Updated : 22 Feb, 2019 12:39 PM

 

Published : 22 Feb 2019 12:39 PM
Last Updated : 22 Feb 2019 12:39 PM

மதுரையில் வசிப்பிடக் கல்வியில் ஆர்வம் காட்டும் வெளிமாநிலக் குழந்தைகள்: படிப்புடன் பெற்றோரின் தொழிலுக்கும் உதவி

மதுரையில் வசிப்பிடத்தில் கல்வி கற்க ஆர்வம் காட்டும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் தொழிலுக்கு உதவியாக இருக்கின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்சா) திட்டம் சார்பில், பல்வேறு சூழல் இடைநிற்றல் தடுக்க, ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்கின்றனர்.

இடைநிற்றலைக் கண்டறிந்து, அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க, ஏற்பாடு செய்கின்றனர். பள்ளிக்கூடங்களுக்கு செல்ல இயலாத குழந்தைகளாக இருந்தால், வசிப்பிடத்திலேயே தற்காலிக ஆசிரியர்கள் மூலம் தொடர்ந்து கல்வி பயிலும் சூழலை உருவாகி தரப்படுகிறது.

இதன்மூலம் அவர்களுக்கு கல்விச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. பெற்றோருக்கு உதவியாக இருந்து கொண்டே கல்வி பயிலும் இத்திட்டத்தில் ஏராளமான குழந்தைகள் மதுரையில் பயன் பெறு கின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சர்வேயர் காலனி உட்பட பல இடங்களில் சாலையோரங்களில் தங்கி பொம்மைகள், சுவாமி சிலைகள், கலைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் பொம்மைகள், தேன் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் ராஜஸ்தானி உட்பட வெளிமாநில குடும்பத்தினர் குழந்தைகளுக்கு வசிப்பிடக் கல்வி கற்றுத்தரப்படுகிறது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சர்வேயர் காலனி ரோட்டில் தங்கி வண்ண பொம்மை, சுவாமி சிலைகள் தயாரிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க, மதுரையைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை அவர்களின் குடிசைக்கு சென்று தமிழ், ஆங்கிலம், கணிதம், ஓவியம் மற்றும் இந்தி போன்ற பாடங்களை சொல்லித் தருகிறார்.

குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை தேர்வும் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு தேவையான பாடப்புத்தம், நோட்டுகள், எழுது பொருட்கள், ஆடை ஆகியவை ஒருங் கிணைந்த கல்வித் திட்டத்தால் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இவர்களின் வருகைப் பதிவு உலகநேரி அரசு நடுநிலைப்பள்ளி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுகிறது. வெளிமாநில குழந்தைகளுக்கு வசிப்பிடக் கல்வி கற்றுத்தருவதன் மூலம், கல்வி மேம்பாடு மட்டுமின்றி தொழிலுக்கு உதவியாக இருக்கிறது என, குழந்தைகளின் பெற்றோர் கூறுகின்றனர்.

அகமதபாத்தைச் சேர்ந்த மீனாள் கூறியது:

''சில ஆண்டுக்கு முன்பில் இருந்து மதுரையில் வசிக்கிறோம். எனது 2 குழந்தைகள் மானகிரி பள்ளியில் படிக்க வைத்தேன்.

தொழில் தொடர்பாக சர்வேயர் காலனி ரோட்டில் குடிசைபோட்டு வாழ்கிறேன். ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டை இருந் தாலும், நிரந்தர வசிப்பிடம் இல்லை.

எங்களது தொழிலுக்கு குழந்தைகள் உதவியாக இருப்பதால் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியவில்லை. வீட்டுக்கே வந்து கல்வி கற்றுத் தருவதால் எங்களது குழந்தைகள் இந்தி மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம் பேசுவதோடு ஓவியம் கற்கின்றனர்.

இதன்மூலம் புதிய வகையில் பொம்மைகள், சுவாமி சிலையை வடிவமைக்கின்றனர். கல்வி தொழிலுக்கும் உதவியாக உள்ளது'' என்றார்.

 

 

ஓருங்கிணைந்த கல்வி மதுரை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா கூறுகையில்,‘‘ மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனை யின்படி, இது போன்ற குழந்தைகளுக்கு தேவை யான உதவிகளை செய்கிறோம். அரசு பள்ளி குழந்தைகளுக்கு கிடைக்கும் நோட்டு, புத்தகம் உட்பட அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கிறது.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சர்வேயர் காலனி ரோட்டில் மட்டும் 25க்கும் மேற் பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

விரும்பினால் வயது வித்தியா மின்றி கல்வித் கற்றுத் தருகிறோம். விருப்ப மொழி இந்தியாக இருந்தாலும், தமிழ், ஆங்கிலம் உட்பட பிற பாடங்களும் கற்றுத்தருவதால் சரளமாக பேசுகின்றனர். மதுரை மாவட்டத்தில் 22 சிறப்பு பயிற்சி மையம் செயல் படு கிறது.

இது போன்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து வருகை பதிவு பராமரிக் கப்படுகிறது. சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்லும்போதும், பள்ளி யில் சேர விரும்பினால் உரிய சான்றிதழ் வழங்கப்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x