ஆறுதல் கூற சென்ற எங்களுக்கு அபிநந்தன் குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனர்: டி.ஆர்.பாலு

ஆறுதல் கூற சென்ற எங்களுக்கு அபிநந்தன் குடும்பத்தினர் ஆறுதல் தெரிவித்தனர்: டி.ஆர்.பாலு
Updated on
1 min read

ஆறுதல் கூற சென்ற எங்களுக்கு அபிநந்தன் குடும்பத்தினர் ஆறுதல் கூறியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்துள்ள விமானி அபிநந்தன், சென்னையைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபிநந்தன் மனைவி, குழந்தையுடன் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும், அவரது சகோதரி காஷ்மீரில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அபிநந்தனின் தந்தை சிம்மக்குட்டி வர்த்தமானும் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர், இன்று (வியாழக்கிழமை) மாடம்பாக்கத்தில் உள்ள அபிநந்தன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "அபிநந்தன் குடும்பத்தினர் மிக மிக தைரியமாகவும் எதைப் பற்றியும் கவலைப்படாமலும் இருக்கின்றனர். ஆறுதல் கூற சென்ற எங்களுக்கு ஆறுதல் கூறினர். எந்த கவலையும் படவில்லை.

அபிநந்தன் ஒரு மாவீரர். பணியை மிக சிறப்பாக செய்ததற்கு அவரின் குடும்பத்தினர் பெருமைப்படுகின்றனர்.

இதுபோன்ற  மிக மோசமான சூழலில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் ஏற்படும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத்தான் சிந்திக்கின்றனர்", என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in