Published : 08 Feb 2019 03:06 PM
Last Updated : 08 Feb 2019 03:06 PM

தமிழக பட்ஜெட் 2019-20 சிறப்பம்சங்கள்: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

தமிழக சட்டப்பேரவையின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள்:

மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்காக ரூ.725 கோடி ஒதுக்கீடு

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

உழவர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.169.81 கோடி ஒதுக்கீடு

வருவாய் துறைக்கு ரூ.6,106.9 கோடி ஒதுக்கீடு

தமிழ்மொழி வளர்ச்சி துறைக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு

காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்திற்கு ரூ.8,084.80 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறைக்கு ரூ.407.76 கோடி ஒதுக்கீடு

சிறைச்சாலை துறைக்கு ரூ.319.92 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகம் துறைக்கு ரூ.1,265.64 கோடி ஒதுக்கீடு

வேளாண்மை துறை: மொத்தமாக ரூ.10,550.85 கோடி ஒதுக்கீடு

வேளாண்மை துறையில் எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு?

நுண்நீர் பாசன திட்டத்தில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர்பரப்பளவுக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு

சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் அமைக்க ரூ.84.09 கோடி ஒதுக்கீடு

நிலையான மானாவரி வேளாண்மை திட்டத்திற்கு ரூ.292 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பண்ணை முறை திட்டத்தில் மேலும் 5,000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் 25 மாவட்டங்களில் ரூ.101.62 கோடி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

கூட்டு பண்ணை திட்டத்திற்கு ரூ.100.42 கோடி ஒதுக்கீட்டில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் அமைக்கப்படும்.

நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு

கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்திற்கு ரூ.172.06 கோடி ஒதுக்கீடு

பயிர்கள் மற்றும் காய்கறிகளை பயிர்விக்கும் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்திக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு

வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ரூ.79.73 கோடி ஒதுக்கீடு

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

நீடித்த, நிலையான தேசிய வேளாண் இயக்கத்திற்காக ரூ.87.22 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு துறை

ரூ.10,000 கோடி ரூபாய் அளவில் வேளாண் கடன் வழங்க உத்தேசம்

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் துறைக்கு மொத்தமாக ரூ.1,252.41 கோடி ஒதுக்கீடு

கால்நடை துறையில் எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

விலையில்லா கறவை மாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.198.75 கோடி ஒதுக்கீடு

ஜீவன அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

கால்நடை நிலைய கட்டடங்கள் கட்டுமானத்திற்கு ரூ.60.27 கோடி ஒதுக்கீடு

பால் வளத்துறைக்கு ரூ.258.45 கோடி ஒதுக்கீடு

ஆவின் பால் நிலையம் மற்றும் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.237.27 கோடி ஒதுக்கீடு

பால் பதப்படுத்துதல் ரூ.200 கோடி ஒதுக்கீடு

புதிய உறைவிந்து நிலையம் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறை - 927.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்திற்காக ரூ.170.13 கோடி ஒதுக்கீடு

நீர்வள ஆதாரங்கள் மற்றும் பாசனம் - ரூ.5,983.98 கோடி ஒதுக்கீடு

குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ.235.02 கோடி ஒதுக்கீடு

பருவநிலை மாற்றத்தை தடுக்கும் திட்டத்திற்காக ரூ.478.73 கோடி ஒதுக்கீடு

அணைகள் புணரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தட்டத்திற்கு ரூ.43 கோடி ஒதுக்கீடு

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு முறையே ரூ445.05 கோடி, ரூ.31.78 கோடி ஒதுக்கீடு

சென்னையை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களை பாதுகாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு

அடையாறு மற்றும் கூவம் நதிகளை சீரமைக்க முறையே ரூ.555.46 கோடி, ரூ.604.77 கோடி ஒதுக்கீடு

பொது விநியோக திட்டத்தின்கீழ் உணவு மானியத்திற்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொது விநியோக திட்டத்தை செயல்படுத்த ரூ.333.81 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பகிர்வு

ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையே ரூ.6,573.61 கோடி, ரூ.5,164.98 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்திற்காக ரூ.5,178.5 கோடி ஒதுக்கீடு

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273.96 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700.64 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறைக்கு ரூ.6,265.52 கோடி ஒதுக்கீடு

வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1031.53 கோடி ஒதுக்கீடு

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு

பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கிடு

உயர்கல்வி துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x