Published : 17 Feb 2019 10:20 PM
Last Updated : 17 Feb 2019 10:20 PM

கோவை ஞானி, பா.வெங்கடேசன், விக்ரமாதித்தியனுக்கு தமிழ் திரு விருதுகள்

கோவையில் இன்று (பிப்ரவரி 17) , இந்து தமிழ் திசை நடத்தும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து, தமிழ் திரு விருதுகள் வழங்கும் நிகழ்வோடு நிறைவுற்றது.

நடுப்பக்க ஆசிரியர் சமஸ் தமிழ் திரு விருதுகள் பெறுவோரை அறிவித்தார்.  அப்போது அவர் பேசியதிலிருந்து:

கடந்த 2017- தமிழ்த்திரு அறிவித்தபோது இரண்டு விஷயங்களை சொன்ன அதே கருத்தைச் சொல்கிறேன். தமிழ் நாளிதழ், தமிழ் சமூகம் மக்கள் நலன் சார்ந்த படைப்பாளிகளை புறக்கணிக்கும் கோபத்திலிருந்து எழுந்ததே இந்த விருது.

பா.வெங்கடேசன் 30 ஆண்டுகளாக ஓசூரில் வசிக்கிறார். இன்னும் சில வீடுகள், ஒரிஜினல் நியூஸ் ரீல், ராஜன் கதை, தாண்டவராயன் கதை அவரது படைப்புகளில் முக்கியமானது. பாகீரதியின் மதியம் நாவல் அவருக்கு பெருமைச் சேர்த்தது. தமிழில் ஒரு உலக எழுத்தாளர் என பா.வெங்கடேசனைக் கூறலாம். 3 நாவல்கள், ஒரு நெடுங்கதை, ஒரு கவிதை தொகுப்பு. சமகால இலக்கிய சாதனையாளருக்கான தமிழ் திரு விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

நம் காலத்தின் மிகப்பெரிய கவி விக்ரமாதித்தன். 40 ஆண்டுகளாக கவிதையையே முழு வாழ்க்கையாக கொண்டு இயங்கி வருபவர். நெல்லையில் பிறந்தவர். சமகால இலக்கிய சாதனையாளருக்கான தமிழ் திரு விருது கவிஞர் விக்ரமாதித்தனுக்கு வழங்கப்படுகிறது.

கோவை ஞானிக்கு தமிழ் திரு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மண்ணிற்கு மார்க்சிய ஒளியை அளித்த மண்ணின் மைந்தர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் இயங்கியவர். தமிழ் இலக்கியத்தையும் மார்க்சியத்தையும் ஒன்றாக இணைத்தவர். அவருக்கு இந்த விருதளிப்பதில் இந்து தமிழ் திசை பெருமை கொள்கிறது.

எழுத்தாளர் வெங்கடேசனுக்கு கோவை ஞானி தமிழ்திரு விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கி கௌரவித்தார்.

மூத்த தமிழ்க்கவிஞர் விக்ரமாதித்தியன் தமிழ்திரு விருது, ஒரு லட்சம் பணமுடிப்பும் வழங்கினார் கோவை ஞானி.

வாழ்நாள் சாதனையாளர் விருதையும் ரூ.3 லட்சத்துக்கான பணமுடிப்பையும்  நீதிபதி ஜியாவுத்தின், ராம்ராஜ் காட்டன் நிர்வாகி நாகராஜன் , பிஎஸ் ஆர் சில்கஸ் ஜெகதீசன், இந்துஸ்தான் கல்லூரி அறங்காவலர் சரஸ்வதி, கோவை மெடிக்கல் செண்டர் தாளாளர் தவமணிதேவி. உள்ளிட்டோர் கூட்டாக விருதையும், ரூ.3 லட்சம் பணமுடிப்பையும் வழங்கினர்.

தமிழ் திரு விருது பெற்றோர் ஏற்புரையில் பேசியதிலிருந்து, சில துளிகள்;

பா.வெங்கடேசன்: உணர்ச்சிப்பூர்வமான பகுதிகளை ஒதுக்கிவிட்டு சம்பிரதாய பூர்வமான விஷயங்களைச் சொல்லிக்கொள்கிறேன். தமிழ்சமுதாயம் இணைந்த இந்து தமிழ் நாளிதழ், கோவை ஞானி அவர்களோடு சமமாக அமர்த்தி விருது அவர் கையால் கொடுத்ததை பெருமையாக நினைக்கிறேன்.

கோவை ஞானி: இந்த விருது நான் சற்றும் எதிர்பாராதது. தமிழ் இலக்கியம் எரியும் கடல் போன்றது, அதை உண்டு செரிப்பதற்கு யாராலும் இயலாது. அந்த கடல் ஓரத்தில் நின்று நீரை பருகியவர்களில் நானும் ஒருவன். அதில் மார்க்சிய இலக்கியத்தோடு இணைந்து இந்த பரிமாணம், நிகழ், தமிழ் நயம் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்திவருகிறேன்.

நெருக்கடி என்ன செய்யவேண்டும் என்பதை பலநூறுபேர் கருத்தை தொகுத்து செய்துவருகிறேன். அதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதில் செலவு அதிகம். அதை வரவாக வைத்துக்கொள்கிறேன். 40 ஆண்டுகால பணிக்கு விருதாக இதை நினைத்துக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x