Last Updated : 04 Feb, 2019 09:06 PM

 

Published : 04 Feb 2019 09:06 PM
Last Updated : 04 Feb 2019 09:06 PM

ராகுல் வாய்ப்பளித்தால் மக்களவையில் போட்டியிடுவேன் –திருநாவுக்கரசர் கருத்து

ராகுல் காந்தி வாய்ப்பளித்தால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என திருநாவுக்கரசர் டெல்லியில் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் பதவி இழந்த பின் இன்று அவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.

 

இந்த சந்திப்பிற்கு பின் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பாஜகவில் இருந்து காங்கிரஸில் சேர ராகுல் காந்தியே காரணம். தமிழகத்தின் உயர்ந்த பதவியில் என்னை தலைவராக பணியாற்ற ராகுல் காந்தி வாய்ப்பளித்தார். இதற்காக எனது நன்றியை தெரிவிக்க சந்தித்தேன்’ எனத் தெரிவித்தார்.

 

ராகுல் காந்தி என் மீது எடுக்கும் முடிவுகளை அவர் மீது நான் கொண்ட பாசத்தால் மதித்து நடப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். இதுபோல் சோனியா காந்தி மீதும் பாசமும், மரியாதையும் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இது குறித்து மேலும் அவர் கூறும்போது, ‘தமிழகத்திலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுவேன். ராகுல் பிரதமராக மக்களவை தேர்தலில் பாடுபடுவேன். புதிதாக அமர்த்தப்பட்டுள்ள தலைவருக்கும், அவரது குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.’ எனத் தெரிவித்தார்.

 

ரஜினி தமது 40 வருட கால நண்பர் எனவும், அவரை அமெரிக்காவில் தான் சந்தித்தகவில்லை என்றும் தன் மீதானப் புகாருக்கு திருநாவுக்கரசர் பதில் அளித்தார். மேற்கொண்டு காங்கிரஸில் தாம் செயல்படுவது குறித்தும் ராகுல் காந்தியிடம் ஆலோசனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பதவி இழந்தது குறித்து தமக்கு எந்த கசப்பும் இல்லை எனவும் தெரிவித்த திருநாவுக்கரசர், தன் மீதானப் புகார்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். ப.சிதம்பரம் தனது நண்பர் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x