Published : 22 Feb 2019 10:55 AM
Last Updated : 22 Feb 2019 10:55 AM

நாளை குரூப்-2 முதன்மைத்தேர்வு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குரூப்-2 முதல்நிலைத் தேர்வு கடந்த 11.11.2018 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் 17.12.2018 அன்றுவெளியிடப்பட்டன. முதன்மை எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (நாளை) 15 மாவட்ட தலை நகரங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணை யதளத்தில் (www.tnpscexams.net) வெளியிடப்பட்டுள்ளது.

இதுநாள் வரையில் முதன்மை எழுத்துத்தேர்வுக்கு கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை தனித் தனியே வழங்கப்பட்டு வந்தன.

தற்போது கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே விடை புத்தகமாக வழங்கப்படும். அதில் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனியே அச்சிடப்பட்டு அக்கேள்வியின் கீழே விடையளிப்பதற்கான போதிய இடமும் வழங்கப்பட்டிருக்கும்.

தேர்வர்கள் அந்தந்த கேள்விக்கு கீழே கொடுக் கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விடையளிக்க வேண்டும். விடையளிப்பதற்கென ஒதுக்கப் பட்டுள்ள இடத்தைத் தவிர ஏனைய இடங்களில் எழுதப்படும் விடைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

எனவே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விடையளிக்க வேண்டும் என்பதால் அவர்கள் விடையளிக்கும்போது மிகுந்த கவனத்துடன் அடித்தல் திருத்தல் இல்லாமல் விடைய ளிக்க வேண்டும் என அறிவுறுத் தப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x