

தமிழக அரசின் பாடநூல் கழகத் தின் புதிய கல்வித்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக உள் ளது. நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை வெறும் பள்ளிப் படிப் பினால் மட்டுமே எதிர்கொள்ள முடி யாது என்ற மனப்பாங்கை வணிகவி யல் ரீதியாக இயங்கும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் மக்களி டம் தவறான எண்ணத்தை ஏற் படுத்தி வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி புராண சிங்கு பாளையத்தில் உள்ள பாவேந் தர் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி யில் இயற்பியல் விரிவுரையாளராக பணியாற்றும் ஆசிரியர் எஸ். ராம், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு இயற்பியல் பாடத்துக்கான ஓர் வலைதள செயலியை உரு வாக்கி உள்ளார். இதன் முகவரி, www.tnplus2.com. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக tnplus2 என்ற ஆன்ட் ராய்டு செயலியை உருவாக்கியு உள்ளார்.
இதுபற்றி ஆசிரியர் ராம் 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: இந்தச் செயலி முற்றிலும் இலவசம். தமிழக புதிய இயற்பியல் பாடத்தை அடிப்படையாக கொண்டு இதை உருவாக்கியுள்ளோம். இச்செயலி மூலம் எனது மாணவர்கள் பள்ளியில் இயற்பியல் 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுதி பயிற்சி பெற்றனர். தேர்வு முடித்த அடுத்த நிமிடம், இந்த செயலி மாணவர்களின் மதிப்பெண்ணை கணினி திரையில் காட்டும். ஆசிரியருக்கும் இந்தச் செயலி மூலம் ஒவ்வொரு மாணவரின் தேர்வு மதிப்பெண் தெரிய வரும்.
இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் மாணவர்கள் செல்போன், டேப்லெட், ஐபாட், கணினி ஆகியவற்றில் எங்கிருந்து வேண்டுமானாலும் தேர்வை எழுதி பார்க்கலாம். இதன் மூலம் மாணவர்களின் இயற்பியல் திறன் மேம்படும். செயலி மூலம் பிளஸ் 2 மாணவர்களுக்கு சுமார் 2,600 வினாக்களும், பிளஸ் 1 மாணவர் களுக்கு சுமார் 2,800 வினாக்களும் கிடைக்கும். தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 11, 12-ம் வகுப்பு இயற்பியல் பாடப் புத்தகத்தில் உள்ள மற்றும் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட, நுழைவுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக் களையும் இச்செயலியில் தேர்வாக வும் பயிற்சியாகவும் பாடவாரியாக எடுத்துக் கொள்ளலாம்.
இச்செயலியை, புதுச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர் ஷாருக்கான், மாணவ ஆசிரியை ஜாஸ்பர் ஆகியோருடன் இணைந்து உருவாக்கியிருக்கி றேன். இயற்பியலுக்கான இச் செயலி உருவாக ஒன்றரை ஆண்டு ஆனது. செயலியை மேம்படுத்தும் முயற்சியில் ஆர்வமுள்ள ஆசிரியர் களும் பங்கேற்கலாம். தங்களது பாடத்தை அவர்கள் பெயரிலேயே பதிவேற்றம் செய்யலாம்.
பிளஸ் 2 இயற்பியல் பாடத் துக்கு மட்டும் மாணவர்கள் ஆப்லை னில் ஆன்ட்ராய்ட் ஆப் மூலம் தேர்வு களை எழுதலாம். tnplus2 என்ற முகவரியை பயன்படுத்தி ஒருமுறை தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். ஆன்ட்ராய்ட் மொபைல் மூலம் இணையதள வசதி இல்லாமலேயே எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்றார். இதுதொடர்பான விளக்கங் களை ஆசிரியர் ஸ்ரீராமிடம் 87541 57469 என்ற எண்ணில் பெறலாம்.