தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு?- விரைவில் அறிவிப்பு

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு?- விரைவில் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக காவல்துறையின் 8 டிஐஜிக்கள் ஐஜிக்களாக பதவி உயர்வு பெறும் கோப்பு தயாராக உள்ளது. உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் அவர்கள் விரைவில் பதவி உயர்வு பெறுவார்கள்.

தமிழக காவல் துறையில் 2001-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போது டிஐஜிக்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற உள்ளனர்.

இதற்கான தமிழக அரசின் பரிந்துரை கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் அவர்களுக்கான பதவி உயர்வு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 2001 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்படையில் வருமாறு:

1. டி. எஸ். அன்பு - இணை ஆணையர் மத்திய குற்றப்பிரிவு சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

2. பிரேமானந்த் சின்ஹா -இணை ஆணையர் சட்டம் ஒழுங்கு (வடக்கு) சென்னை

3. தீபக் தாமோர்   -   அயல்பணி சிபிஐ

4. செந்தில்குமார்   -  சேலம் சரக டிஐஜி

5. அனிசா உசேன்   -  அயல்பணி டெல்லி

6. நஜ்மல் ஹோடா  - இணை ஆணையர் போக்குவரத்து (வடக்கு)

7. மகேந்திர குமார் ரத்தோட் -  நெல்லை காவல் ஆணையர்

8. வனிதா      -      வேலூர் டிஐஜி

ஓரிரு வாரத்தில் இவர்களுக்கான பதவி உயர்வு வர உள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in