Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரதிநிதி அல்ல: பழ.நெடுமாறன் பேட்டி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரதிநிதி அல்ல என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தஞ்சையில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

ஆசிரியர் தினத்தை அந்தந்த மொழிகளில் கொண்டாடுவதுதான் சரியாக இருக்கும். ‘குரு உத்சவ்’ என கொண்டாட வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, சமஸ்கிருதம் மட்டுமே உயர்ந்த மொழி என்பதை நிலைநாட்டுவதற்கான முயற்சி. இதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.

விவசாயிகளின் பழைய கடனை தள்ளுபடி செய்து, புதிய பயிர்க் கடன் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற அறக்கட்டளை நிர்வாகக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், முற்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை நவம்பரில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

“அண்மையில் இந்தியா வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு கேட்கிறோம் என்கிறார். ஆனால், நீங்களோ தனி ஈழம் தான் தீர்வு என்கிறீர்களே” என்று கேட்டபோது, “ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொருத்தவரை ஈழத் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் ஆகியோரிடம் பொது வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல. அவர்களிடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன.

வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடந்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுவரை எந்த அதிகாரமும் அளிக்கப்பட

வில்லை என்று அவர்கள்தான் சொல்கின்றனர். இப்பிரச்சி னையைத் தீர்க்க இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் நிலைப்பாடே இரட்டை வேடமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்” என்றார் நெடுமாறன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x