Last Updated : 28 Feb, 2019 09:32 AM

 

Published : 28 Feb 2019 09:32 AM
Last Updated : 28 Feb 2019 09:32 AM

சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியில் அழிவை நோக்கி செல்லும் சுரபுன்னை காடுகள்

சிதம்பரம் அருகே உலகப் புகழ் பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்தச் சுற்றுலா மையத்தில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே சுமார் 4,000 ஏக்கருக்கும் மேல் சுரபுன்னை (மாங்ரோவ்) எனப்படும் சதுப்பு நிலக் காடுகள் பரந்து விரிந்து வளர்ந்துள்ளன.

இந்தக் காட்டில் சுமார் 18 வகை யான மருத்துவ குணம் கொண்ட அரிய தாவரங்களும் உள்ளன. இயற்கை சீற்றங்களான சுனாமி, சூறாவளி போன்றவற்றில் இருந்து அதிக பாதிப்பு ஏற்படாமல் இவ் வகை சுரபுன்னை காடுகள் அரண் போல பாதுகாத்து வருகின்றன.

சுற்றிலும் அடர்ந்து பரந்து விரிந்த சுந்தரவனக் காடுகளால் இப்பகுதிக்கு பல்வேறு வெளி நாட்டு பறவைகளும் வந்து செல் கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து இந்த சுரபுன்னை காடுகளை கண்டு ரசிக்கின்றனர்.

படகு சவாரி

இவ்வளவு பெருமை வாய்ந்த சுரபுன்னைக் காடுகள் சமீபகால மாக மெல்ல, மெல்ல அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின் றன. காட்டுப் பகுதியில் சில இடங் களில் சுரபுன்னை மரங்கள் காய்ந்து கருகிவிட்டன. கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாக சுற்றுலாத் துறை சார்பில் இங்கு படகு சவாரி நடந்து வரும் நிலையில், சமீப காலமாக சுற்றுலாத் துறைக்கு போட்டியாக வனத்துறையும் படகு சவாரியை தொடங்கி உள்ளது.

வனத் துறையினர் வனப் பகுதி களை கண்காணித்து பாதுகாக்கா மல் படகு ஓட்டுவதில் கவனம் செலுத் துவதாக விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சுரபுன்னை காடுகளைச் சுற்றி உள்ள கடல் முகத்துவார கிராமங்களில் ஏராளமானோர் இறால் பண்ணைகளை அமைத் துள்ளனர். இந்த இறால் பண் ணைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, சுரபுன்னை மரங் கள் காய்ந்து விடுவதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர்.

சிறந்த சுற்றுலாத் தலம் என்ற பெயர் பெற்றுள்ள இயற்கை எழில் கொஞ்சும், மருத்துவ குணம் கொண்ட பிச்சாவரம் வனப் பகுதியை அழிவில் இருந்து பாது காக்க வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x