ரகசிய முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம்:  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ரகசிய முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் போது கூட்டணி பற்றி அறிவிப்போம்:  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Updated on
1 min read

வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்பதை கூற முடியாது, அது ஒரு ரகசியம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போது கூட்டணி பற்றி நிச்சயம் அறிவிக்கப்படும்.

அதிமுகவில் எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால் முடிவை ஒன்று சேர்ந்து அறிவிப்போம். எங்களுடன் ஒத்தக்கருத்து இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்.

தோழமை கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசிய கட்சிகளாக இருந்தாலும், மாநில கட்சிகளாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.

என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in