Published : 17 Feb 2019 07:04 AM
Last Updated : 17 Feb 2019 07:04 AM

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம்: மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிவச் சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களில் நேற்று நல் லடக்கம் செய்யப்பட்டன.

அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சி.சிவச்சந்திரனின் (35) உடல் அவரது வீட்டின் முன்பு வைக்கப் பட்டது. அவரது தந்தை சின்னை யன், மனைவி காந்திமதி மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் மலர் களைத் தூவி சிவச்சந்திரனின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர்கள் அஞ்சலி

அங்கு, சிவச்சந்திரன் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே, தமிழக அமைச் சர் என்.நடராஜன், அரசு தலை மைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந் திரன், மாவட்ட ஆட்சியர் எம்.விஜய லட்சுமி, சிதம்பரம் தொகுதி மக்க ளவை உறுப்பினர் மா.சந்திரகாசி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராம ஜெயலிங்கம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சிவச்சந்திரனின் குடும்பத்துக்கு சிஆர்பிஎப் டிஐஜி சோனல் வி. மிஸ்ரா, திருச்சி சரக டிஐஜி லலிதா லட்சுமி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்ரீனி வாசன் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர்.

முழக்கமிட்ட இளைஞர்கள்

சிவச்சந்திரனின் உடல் கார்குடி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, அவ்வூர் இளைஞர்கள், பாகிஸ்தானுக்கு எதிராகவும், ராணுவ வீரர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். தேசப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஜெய்ஹிந்த் எனவும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து, சிவச்சந் திரன் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில், 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது. சிவச்சந்திரனின் தந்தை சின்னையன் மற்றும் 2 வயது மகன் சிவமுனியன் ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்தனர். முன்னதாக சிவச்சந்திரனின் உடல் மீது போர்த் தப்பட்டிருந்த தேசியக் கொடியை சிஆர்பிஎப் டிஐஜி சோனல் வி.மிஸ்ரா, அவரது மனைவி காந்திமதியிடம் வழங்கினார்.

ரூ.20 லட்சம் நிதியுதவி

தமிழக அரசின் சார்பில் முதல்வர் பழனிசாமியால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டபடி, ரூ.20 லட்சத் துக்கான காசோலையை சிவச்சந்திர னின் மனைவி காந்திமதியிடம் அமைச்சர் என்.நடராஜன் நேற்று வழங்கி ஆறுதல் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில்

முன்னதாக, சிவச்சந்திரனின் உடல் தனி விமானம் மூலம் டெல்லி யில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப் பட்டது. அதைத்தொடர்ந்து, பாது காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய திறன் மேம் பாட்டுத் துறை இணையமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே ஆகியோர் மற்றொரு தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.

விமான நிலையத்துக்கு வெளியே சிவச்சந்திரனின் உடலுக்கு மாநில போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்த னர். விமான நிலையத்தில் கவலையு டன் காத்திருந்த சிவச்சந்திரனின் உறவினர்கள், கதறி அழுதனர்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர் கள் நிர்மலா சீதாராமன், அனந்த குமார் ஹெக்டே ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத் தினர். அவர்களைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் என்.நட ராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மக்களவை உறுப்பினர் ப.குமார், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பரமேஸ்வரி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், மாவட்ட ஆட்சியர்கள் கு.ராஜாமணி (திருச்சி), மு.விஜயலட்சுமி (அரியலூர்) மத்திய மண்டல ஐஜி வி.வரதராஜூ, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், சிஆர் பிஎப் டிஐஜி சோனல் வி.மிஸ்ரா, முப்படைகளின் அதிகாரி கள், சிஆர்பிஎப், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், மாநில போலீஸார், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சிவச்சந்திரன் உடல் வைக்கப் பட்டிருந்த சவப்பெட்டியை விமான நிலையத்தில் இருந்து சிஆர்பிஎப் வீரர்கள் சுமந்து கொண்டு வெளியே வந்தபோது, அஞ்சலி செலுத்த காத்திருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் தாய் நாட்டை வாழ்த்தி முழக்கம் எழுப்பினர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்த வந்தபோதும், பின்னர் சிவச்சந்திரனின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அவர் வந்தபோதும், இந்த உயிர்த் தியாகத்துக்கு இந்தியா கட்டாயம் பழி தீர்க்க வேண்டும் என்று பாஜகவி னர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

கோவில்பட்டியில் கண்ணீர்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் மரணமடைந்த சிஆர் பிஎப். வீரர் சுப்பிரமணியன் உடல் 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதை யுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி அருகே சவலாப்பேரியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிர மணியன் உடல் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று மதியம் 12.40 மணிக்கு மதுரை வந்தடைந்தது.

அங்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை ஆட்சியர் எஸ்.நடராஜன், மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவா சீர்வாதம், தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி என்.மணி வண்ணன், மத்திய தொழில் பாது காப்பு படை இணை ஆணையர் மொகந்தி, கோபாலகிருஷ்ணன் எம்பி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பாஜக மாநிலச் செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். விமான நிலையத்தில் இருந்து 2 மணியளவில் ராணுவ வாகனத்தில் சுப்பிரமணியன் உடல் ஏற்றப்பட்டு சொந்த ஊர் புறப்பட்டது.

வாகனத்தின் முன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார். கப்பலூர் டோல்கேட், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வழியோர கிராமங்களில் மக்கள் திரண்டிருந்து, சுப்பிரமணி யன் உடலுக்கு தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். தேசிய கொடியை கைகளில் ஏந்திய கிராம மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை முழங்கினர்.

சவலாப்பேரி வந்ததும், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி யைப் பார்த்து தந்தை கணபதி, தாய் மருதம்மாள், மனைவி கிருஷ்ண வேணி மற்றும் உறவினர்கள் கண் ணீர் விட்டு கதறி அழுதனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எம்எல்ஏக் கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன், கீதாஜீவன், வசந்தகுமார், எஸ்.பி.க்கள் முரளி ராம்பா, அருண் சக்திகுமார், ஆவடி சிஆர்பிஎப் டிஐஜி பிரவீன் சி.காக், எஸ்பி ரோகிணிராஜன், டிஎஸ்பி ஆர்.ஆறு முகம் மற்றும் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணியிடம் தமிழக அரசின் நிதியான ரூ.20 லட்சத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

சுப்பிரமணியனின் உடல் அவரது குடும்ப தோட்டத்தில், அடக்கம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் நடந்தே உடன் வந்தனர். சிஆர்பிஎப் வீரர் கள் 24 குண்டுகள் முழங்க, சுப்பிர மணியனின் உடல் அடக்கம் செய்யப் பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உயிர்த்தியாகம் செய்தது பெருமை

சுப்பிரமணியன் மனைவி கிருஷ் ணவேணி கூறியது: ‘‘எனது கணவர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தது பெருமையே. திருமணத் துக்கு பிறகு 6 முறை மட்டுமே அவர் விடுமுறையில் வந்துள்ளார். அப்போது தனது வேலை குறித்த தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். ஒரு நேரத்தில் 2 அல் லது 3 வாகனங்கள் மட்டும்தான் வரிசையாக செல்லும். அதுவும் காலையில் 3 வாகனங்கள் புறப் பட்டுச் சென்றால், மீண்டும் மதி யமோ அல்லது இரவோதான் அடுத் தகட்ட வாகனங்கள் புறப்படும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது ஒரே நேரத் தில் 2,500 வீரர்களுடன் 70 வாகனங் கள் வந்துள்ளன. ஜம்மு கேம்ப்பில் 20 நாட்கள் அவர்களை வைத்திருந்து, மொத்தமாக ஸ்ரீநகருக்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்து அரசுதான் பதில் அளிக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது’’ என்றார்.

சவலாப்பேரியை சேர்ந்த இளை ஞர்கள் நேற்று காலை பாகிஸ்தா னுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி யவாறு தீவிரவாதி அடிலின் உருவபொம்மை மற்றும் பாகிஸ்தான் கொடியை தீயிட்டு கொளுத்தினர்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி வட்டம் சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் ஜி.சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் மகன் சி.சிவச்சந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என்ற செய்தி எனக்கு மனவேதனை அளித்தது.

இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக இன்னுயிரை தியாகம் செய்த சுப்பிரமணியன், சிவச்சந்திரன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மறைந்த சுப்பிரமணியன், சிவச்சந்திரன் ஆகியோரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மீது பொருளாதார தடை- தம்பிதுரை வலியுறுத்தல்

பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதித்தால்தான் பயங்கர வாதத்தை ஒழிக்க முடியும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டம் தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாத தாக்குதல் கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் திருந்துவதாக தெரியவில்லை. உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்றார்.

சிவச்சந்திரனுக்கு நினைவு சின்னம்: தமிழிசை

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிவச் சந்திரனின் மனைவி காந்தி மதி, தந்தை சின்னையன் மற் றும் குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டுக்காக உயிர் நீத்த சிவச்சந்திரன் பிறந்த ஊரின் மண்ணை மிதிப்பதை பெருமையாகக் கருதுகிறேன். சிவச்சந்திரனின் 2 வயதேயான மகனுக்கும் அவரது தந்தைக்கும் ராணுவ உடை போன்ற உடையை சிவச் சந்திரன் வழங்கியதும், மகனை காவல்துறை அதிகாரியாக்கி நாட்டைப் பாதுகாக்க நினைத் ததும் என்னைக் கண்கலங்க வைத்தது. அவரது குடும்பத் துக்கான அனைத்து செலவு கள் மற்றும் மகனின் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண் டும். மேலும், சிவச்சந்திர னுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x