Published : 08 Feb 2019 07:38 AM
Last Updated : 08 Feb 2019 07:38 AM

சலுகைகள், புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு; தமிழக அரசின் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல்: துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டப்பேரவையில் 2019-20 நிதி யாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். மதுபான விற்பனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், முக்கிய மான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய் யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளு மன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற் கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத் தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கு கிறது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதி யமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். முன்னதாக, அவர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவார் என கூறப் படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்படுவதால், இந்த பட் ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த் துள்ள நிலையில் குடிநீர் திட்டங்கள், விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிக முக்கியத்துவம் இருக்கும் என கூறப்படுகிறது.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப் படும் என மத்திய அரசின் இடைக் கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகை 3 தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் இந்த நிதியுதவி திட்டத்துடன் தமிழக அரசும் சில சலுகைகளை விவ சாயிகளுக்கு அறிவிக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் மது விற்பனை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசா ரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ’மது விற்பனையில் கிடைக்கும் வருவாயை நம்பாமல் வேறு வருவாய் வழிகளை அரசு கண்டறிய வேண்டும். டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெ னவே, தமிழகத்தில் ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுடன், திறக்கும் நேர மும் பகல் 12 மணியாக மாற்றப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற அறிவுறுத் தலின்படி மதுபான விற்பனை நேரம் தொடர்பான சிறப்பு அறிவிப்பு பட்ஜெட் டில் இடம்பெறலாம் என தெரிகிறது.

முதல்வர் கே.பழனிசாமி பதவி யேற்று, வரும் 16-ம் தேதியுடன் 2 ஆண்டு கள் நிறைவடைகிறது. இதையொட்டி யும் சில முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் டில் இடம்பெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அலுவல் ஆய்வுக்குழு

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பகல் 1 மணி அளவில் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது. இதில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவெடுக்கப்படும். பிப்ரவரி 18-ம் தேதி வரை பேரவை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x