Published : 24 Feb 2019 02:29 PM
Last Updated : 24 Feb 2019 02:29 PM

ஹோட்டல் முன் 7 அடி உயரத்தில் பிரம்மாண்ட டிபன் கேரியர்: பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க மதுரை வியாபாரி புதுமையான விழிப்புணர்வு

மதுரையில் ஹோட்டல் நடத்திவரும் ஒரு வியாபாரி பார்சல் சாப்பாடு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு டிபன் கேரியர் கொண்டு வருமாறு நினைவுபடுத்தும் வகையில் தனது ஹோட்டல் முன் 7 அடி உயர டிபன் கேரியரை வைத்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பில் பொதுமக்களை காட்டிலும் வணிகர்கள் தற்போது ஓரளவு கட்டுப்பாடு களை உருவாக்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் செல்வம், தனது ஹோட்டலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அறவே தவிர்த்துள்ளார். அது மட்டுமின்றி, பார்சல் சாப்பாட்டுக்கு டிபன் கேரியர்களை கொண்டு வருமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறு த்தும் விதமாக, தனது ஹோட்டல் முன் 7 அடி உயர டிபன் கேரியரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த நூதன விழிப்புணர்வு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறவர்கள், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், இதை பார்த்து அதன் முன் நின்று செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

செல்வத்தை அவரது ஹோட் டலில் சந்தித்து பேசினோம்.

‘‘எங்கம்மா ஆரம்பத்தில் வீட்டில் மெஸ் நடத்தினார். அதன்பிறகு, நான் மதுரையில் நடைபாதையில் இட்லி கடை நடத்தினேன். தற்போது கேட்டரிங் சர்வீஸ், ஹோட்டல் நடத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளேன். பிளாஸ்டிக் ஒழிப்பை பொதுமக்களிடம் ஆழமாகப் பதிய வைக்கவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் எண்ணம் ஏற்படவும் பிரம்மாண்டமான வடிவில் இந்த டிபன் கேரியரை வைத்துள்ளேன்.

மதுரையில் உள்ள பாத்திரக் கடைகளில் இந்த டிபன் கேரியரை செய்து தரக் கேட்டோம். இப்படியொரு டிபன் கேரியர் இல்லை என்றும், ஒருவருக்காக 7 அடி உயர டிபன் கேரியரை செய்த தர வாய்ப்பில்லை என்றும் கைவிரித்தனர். இதையடுத்து கோவையில் ஆர்டர் கொடுத்து செய்தோம். ரூ. 27 ஆயிரம் செலவு செய்து இதை வாங்கினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x