

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடும் தே.மு.தி.க வேட்பாளர்கள் அனைவரும் இன்று காலை 11 மணி அளவில் வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, திருவள்ளூர் , மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில், மத்திய சென்னையில் பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரனும், வடசென்னையில் எம்.சவுந்திர பாண்டியனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தே.மு.தி.க வேட் பாளர்கள் 14 பேரும் இன்று காலை 11 மணி அளவில் வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளனர். இன்று மனு தாக்கல் செய்ய முடியாத வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல் செய்வார்கள் என்று தே.மு.தி.க மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.