

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கும் வகையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாகவும், இதர தேர்தல் முன்னேற்பாடுகள், பணிகள் தொடர்பாகவும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு தனித்தனியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்த 2 நாள் தேர்தல் மேலாண்மை பயிற்சி முகாம் சென்னை அமைந்தகரையில் உள்ள அம்மா கலையரங்கில் 20-ம் தேதி தொடங்கியது. 2-ம் நாளாக நேற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதர தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி மறைமலை நகரில் நேற்று தொடங்கியது. ஏற்கெனவே டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் நேரடியாக பயிற்சி பெற்றுவந்த தேர்தல் துறை அலுவலர்கள் இவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் உள்ள 67,664 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 23, 24 தேதிகளில் நடத்தப்படுகிறது. விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: அங்கீகாரம் பெற்ற மாநில, தேசிய கட்சிகளுடனான அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலை மைச் செயலகத்தில் 22-ம் தேதி (இன்று) பகல் 12 மணிக்கு நடக் கிறது. தமிழகத்தில் வரும் 23, 24 தேதிகளில் நடக்க உள்ள வாக் காளர் பட்டியல் சிறப்பு முகாம் தொடர்பாக இக்கூட்டத்தில் விவா திக்கப்படுகிறது. முகாம் நடக்கும் இடங்களுக்கு வாக்குச் சாவடி முகவர்களை அனுப்புவது தொடர் பாக இதில் தெரிவிக்கப்படும். வாக்காளர்களை புதிதாக சேர்த் தல், நீக்குதல் தொடர்பான விண் ணப்பங்களை அளிக்கலாம். அரசியல் கட்சிகள் மொத்தமாக விண்ணப்பங்களை அளிக்க முடியாது. அதிகபட்சம் 10 விண்ணப்பங்கள் வரை வழங்கலாம்.
தேர்தல் நெருங்குவதால், 3 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றிய அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு வருகின் றனர். இதுதொடர்பான அறிக் கையை தேர்தல் ஆணையத்திடம் தமிழக தேர்தல் துறை வரும் 25-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். அதற்குள் இடமாற்றங்கள் முடிக்கப்படும். இவ்வாறு சத்யபிரத சாஹு தெரிவித்தார்.