Published : 26 Jan 2019 09:14 AM
Last Updated : 26 Jan 2019 09:14 AM

யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 விநாடிகள் காட்டும் வசதி: அனைத்து சாவடிகளிலும் ‘விவிபாட்’ இயந்திரம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ‘விவிபாட்’ இயந்திரம், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

இளம் வாக்காளர்களை வாக் காளர் பட்டியலில் சேர்த்து, தேர்த லில் அவர்கள் தவறாது வாக்க ளிக்கச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் 9-வது தேசிய வாக்காளர் தின விழா சென்னை ரிப்பன் மாளி கையில் நேற்று நடந்தது.

சேவை மையம் திறப்பு

இதில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பங்கேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான வாக்காளர் தொலைபேசி சேவை மையத்தை திறந்து வைத்தார். வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங் கினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தகுதியான ஒரு வாக்காளர்கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது. வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக முறையில் வாக்களிக்க வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு, தேசிய வாக்காளர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த 5 மாதங்களாக நடந்து வருகின்றன. இறுதிப் பட்டியல் 31-ம் தேதி வெளியிடப்படும்.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ‘விவிபாட்’ இயந்திரம், இந்த ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்கா ளர் ஓட்டு போட்டதும், தான் வாக்களித்த வேட்பாளரின் சின்னம், வரிசை எண் ஆகியவற்றை 7 விநா டிகள் வரை பார்க்க முடியும். விவிபாட் இயந்திரத்தின் செயல் பாடுகள் குறித்து மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘1950’ என்ற வாக்காளர் அழைப்பு மைய தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடர்புகொண்டு, வாக்கா ளர் இடம்பெற்றுள்ள தொகுதி, மாவட்ட தேர்தல் அலுவலர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்குச்சாவடி அலுவ லர் பற்றிய விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி 100% அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. 31-ம் தேதி வெளியிடப்ப டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் அனைத்து புதிய வாக்காளர் களுக்கும் ஒரு மாதத்துக்குள் வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் தேர்தல் நடத்துவ தற்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தால், தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம். ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக பேரவையில் இருந்து தகவல் தெரிவித்த பிறகு, அங்கு தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர்கள் ஆர்.லலிதா, பி.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x