Published : 10 Jan 2019 11:06 AM
Last Updated : 10 Jan 2019 11:06 AM

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு; தமிழக எம்பிக்கள் பகை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்: வேல்முருகன்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழக எம்பிக்கள் பகை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இயற்கைக்கும் அறத்திற்கும் எதிராக, பிறப்பால் மனிதரைத் தரம் தாழ்த்தி இழிவு செய்யும் சாதியத்தை தனது மரண தறுவாயிலும் வலுப்படுத்த முயல்கிறது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. ஏனென்றால் இன்னும் மூன்று மாதத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் அகற்றப்பட்டுவிடுவோம் என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில்124 ஆவது திருத்தம் செய்யும் மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது.

இந்த மசோதாவை காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றிவிட்டு, மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தது. இதனை கடுமையாக எதிர்த்து அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். அதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்காக இன்றும் அவை கூட இருக்கிறது.

இந்தியச் சமூகம் படிநிலை அடுக்காக அமைந்த ஒரு சாதியச் சமூகம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டனர். இன்றும் ஒடுக்கப்படுகின்றனர். அதிகாரத்தில் கல்வியில் அரசு மற்றும் தனியார் துறைகளில் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. அங்கெல்லாம் 95 சதவீதம் மேல்சாதியினரே உள்ளனர்.

இதற்காக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்னும் இட ஒதுக்கீடு கோரப்பட்டு, அதற்காகத்தான் அரசமைப்புச் சட்டத்தில் முதன்முதலில் திருத்தமே மேற்கொள்ளப்பட்டது. பெரியார் சொன்ன அந்த திருத்தத்தை பிரதமர் நேருவும் சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கரும் செய்தனர். அப்போது பொருளாதார அளவுகோலும் நீட்டப்பட்டது. ஆனால், பிரதமர் நேரு, பொருளாதார அளவுகோல் என்பது அவ்வப்போது மாறக்கூடியது; அது திட்டவட்டமான அளவுகோல் அல்ல என்று வாதிட்டு அது நிராகரிக்கப்பட்டது.

அதன்பின் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் 15(4) என்ற புதுப்பிரிவு சேர்க்கப்பட்டு, அது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு என்ற சொற்றொடரும் போடப்பட்டது. அதாவது முதல் திருத்தத்தின்போதே பொருளாதார அளவுகோல் நிராகரிக்கப்பட்டது.

பிறகு மண்டல் குழு பரிந்துரைகள் விவாதத்தின்போது, 1992-ல் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருக்கையில், மேல்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆணை கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான இந்திரா - சகானி என்ற அந்த வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது; 13(1), 14, 15, 15(4) ஆகிய சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, மேல்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆணை செல்லாது என்றது.

மேலும், பொருளாதார அளவுகோல்படி இட ஒதுக்கீடு வழங்க அது ஒன்றும் வறுமை ஒழிக்கும் திட்டமல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதியான ஓ.சின்னப்ப ரெட்டி ஒரு வழக்கில் கூறினார். இட ஒதுக்கீடு என்பது, காலங்காலமாக கல்வி,வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைக் கைதூக்கி விடுவது; அது கடந்த கால அநீதிக்குப் பரிகாரம் தேடுவதற்கான வழிவகையே தவிர, வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; எனவே பொருளாதார அளவுகோல் என்பது சட்ட விரோதம் என்று தெளிவுபடுத்தினார்.

2016-ல் மோடியின் சொந்த குஜராத் மாநிலத்தில், மேல்சாதியினர் இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டமே கொண்டு வரப்பட்டது. அதனை எதிர்த்த வழக்கிலும் அந்த அவசரச் சட்டம் செல்லாது என்றே தீர்ப்பு கூறப்பட்டது.

மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்து 23 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 12 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள்தான் கிடைத்திருக்கிறது என்பதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல். இது 100 விழுக்காட்டைத் தொடுவது எப்போது? அப்படியிருந்தும் இன்று இந்த 10 சதவீத மசோதாவை மோடி கொண்டுவந்திருக்கிறார் என்றால் இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதும் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டுவதுமான முயற்சியேன்றி வேறல்ல.

இதனை அதிமுக, திமுக இருகட்சி தமிழக எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டுகிறது. அதே நேரம் இந்த மசோதாவை சட்டமாக்க மோடி அரசு ஓர் உபாயத்தைக் கையாள்கிறது என்பதையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. அதாவது அரசியல் சட்டத்திருத்தம் 368 ஆவது பிரிவின்படி இந்த மசோதா சட்டமாக வேண்டுமானால், நாடாளுமன்ற இரு அவைகளில் 50 சதவீத உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும்;

சூழ்ச்சிகர பாஜகவும் அதன் சூதுமிகு பிரதிநிதியுமான மோடியும் மனித மாண்புகளுக்கு வேண்டும். ஏனென்றால் பிரதமர் மோடியால் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு மொத்த இந்தியருமே இரையாக்கப்படுகிறார்கள்.

அதேபோல்தான் இப்போது, 3 சதவீதம்கூட இல்லாத மேல்சாதியருக்கு 10 சதவீதம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளித்து, இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்.

இப்படி திரேதா யுகத்தில் சஞ்சரிக்கும் மோடி காணும் பகல் கனவைக் கலைக்க புறம்பானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே தமிழக எம்பிக்கள் பகை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அவையில் அமர்ந்து வாக்களிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் அதிமுக மற்றும் தென் மாநில எதிர்க்கட்சி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததற்கான காரணம் இதுதானோ என்று யோசிக்க வேண்டியதிருக்கிறது.

ஆனால் நீதிமன்றம் செல்லும்போது இது சட்டப்படி செல்லாததாகிவிடும் என்பதுதான் இருக்கும் ஒரே ஆறுதல். ஆனாலும்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரக்கச் சத்தமிட்டு எச்சரிக்கிறது" என வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x