Published : 04 Jan 2019 11:13 AM
Last Updated : 04 Jan 2019 11:13 AM

சிறையில் கைதிகளுக்குள் தகராறு: மூதாட்டி கொலை வழக்கில் போலீஸுக்கு துப்பு கிடைத்தது

கோவை மத்திய சிறையில் கைதி கள் சண்டையிட்டுக் கொண்ட போது, மூன்று ஆண்டுக்கு முன் கொலை செய்யப்பட்ட மூதாட்டி பற்றி தெரியவந்தது.

கூடலூர் கவுண்டம்பாளையத் தைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன்(29), சரவணம்பட்டி எஸ்.ஆர்.பி.மில் ஜனதா நகரைச் சேர்ந்த பாட்ஷா (25) ஆகியோர் திருட்டு வழக்கு தொடர்பாக மத் திய சிறையில் அடைக்கப்பட்டி ருந்தனர். அங்கு அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, பங்கஜம் என்பரைக் கொலை செய்துவிட்டு, நகையை பங்கு போட்டது குறித்து பேசி உள்ளனர். இதைக் கேட்ட சக கைதி, சமீபத்தில் வெளியே வந்தபோது, தான் கேட்ட தகவலை பெரியநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெரியநாயக்கன்பாளையம் ராஜூ நகரைச் சேர்ந்தவர் பங்கஜம் (70). இவரது மகன், மகள் வெளியூரில் வசிக்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி மூதாட்டி பங்கஜம் வீட்டில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டார். பெரிய நாயக்கன்பாளையம் போலீஸார் விசாரித்தனர். அதில் பங்கஜம் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிவிட்டு, கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்தது.

இதுதொடர்பாக பெரிய நாயக்கன்பாளையம் போலீஸார் கொலை வழக்குப்பதிந்து விசாரித் தனர். இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாகியும் எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் திணறிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் சிறைக் கைதி தெரிவித்த தகவலால் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது.

கண்ணன், பாட்ஷா ஆகியோ ரின் சிறை நடவடிக்கைகளை கண்காணித்த போலீஸார், கடந்த 30-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x