கோவை அருகே நகைக்கடை ஊழியர்களை தாக்கி 350 பவுன் நகை கொள்ளை வழக்கில் 14 பேர் கைது

கோவை அருகே நகைக்கடை ஊழியர்களை தாக்கி 350 பவுன் நகை கொள்ளை வழக்கில் 14 பேர் கைது
Updated on
2 min read

கோவை அருகே 350 பவுன் நகை கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக் கில் 14 பேரை போலீஸார் கைது செய்தனர். நகைகள், 4 கார்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கேரளாவின் திருச்சூர் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவன கிளையில் இருந்து, கோவை காந்திபுரம் கிளைக்கு 350 பவுன் தங்க நகை, 243.320 கிராம் வெள்ளி நகை, 251 கிராம் வைர நகை ஆகியவற்றை திருச்சூர் கிளை ஊழியர்கள் அர்ஜூன் (22), வில்பர்ட் (31) ஆகியோர் கடந்த 7-ம் தேதி காரில் எடுத்து வந்தனர். கார் நவக்கரைக்கு வந்த போது, இரண்டு கார்களில் வந்து வழிமறித்த கும்பல், இருவரையும் தாக்கி, காருடன் நகையை கொள்ளையடித்தனர்.

இது குறித்து எஸ்.பி பாண்டிய ராஜன் மேற்பார்வையில் போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ் (27), திருச்சூரை சேர்ந்த கண்ணன் (38), எர்ணா குளத்தை சேர்ந்த ஹபீப் (41), இடுக்கியை சேர்ந்த ரின்சாத் சித்திக் (24), பத்தினம் திட்டாவை சேர்ந்த விபின்சங்கீத் (28), திருச்சூரை சேர்ந்த ரெனூப் (34), வேலூரை சேர்ந்த மற்றொரு பைரோஸ் (33), அத்திக்பாஷா (21), ராஜசேகரன் (33), ரிஷ்வான்செரிப் (21), பெங்களூருவைச் சேர்ந்த மெகபூப்பாஷா (26), சாதிக் உசேன் (25), சைய்யது நயீம் (24), அப்துல் ரஹீம் (25) ஆகியோர் எனத் தெரிந்தது.

14 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களை கோவை ஜே.எம்.7 நீீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த வேலூரை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (34), தமிழ்செல்வன் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

திருச்சூர் கிளையில் இருந்து அடிக்கடி நகைகள் எடுத்து செல்வதை, அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ரெனூப் நோட்ட மிட்டு தனது நண்பர்கள் மூலம் 2 கொள்ளை குழுக்களை தயார் செய்துள்ளார். சம்பவத்தன்று நகை யுடன் கார் புறப்பட்டதை விபின் சங்கித், ரிஸ்வான் சித்திக் தங்கள் கூட்டாளிகளுக்கு தெரிவித்தனர். 2 காரில் பின்தொடர்ந்த கும்பல், நவக்கரை அருகே வழிமறித்து நகையை காருடன் கொள்ளையடித்தனர்.

முறையான கணக்கு இல்லாத ஹவாலா தங்கம் என நினைத்து கொள்ளையடித்ததாக கைதானவர்கள் போலீஸில் தெரி வித்துள்ளனர். இதில், கைதான பைரோஸூக்கு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் தொடர்புள்ளது. கொள்ளையடித்த நகையில் ஒரு பகுதியை தன் சகோதரர் அகமது சலீம், தாய் சமா ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அவர்களை திருப்பதி போலீஸார் சில தினங் களுக்கு முன் கைது செய்தனர்.

பிடிபட்டது எப்படி?

மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆர்.பாண்டியராஜன் கூறியதாவது: கொள்ளை சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் வந்த ஒரு கார் வேலூர் ராஜசேகரனுக்கு சொந்தமானது எனத் தெரிந்தது. இதை ஒரு தனிப்படை விசாரித்தது. முன்னாள், இந்நாள் ஊழியர்கள், சந்தேகத்துக்குரிய நபர்கள் விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பல்வேறு விசாரணைகளில் இவ்வழக்கு தொடர்பாக பாலக்காடு, வேலூர், சுல்தான்பாலி ஆகிய இடங்களில் 14 பேர் பிடிபட்டனர்.

இவ்வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகிறோம். கைதானவர்களிடம் இருந்து 2,488 கிராம் தங்கம் மற்றும் வைர நகை, 243 கிராம் வெள்ளி நகை, 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கார் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துடையது. ஒரு கார் ஜெயப்பிரகாஷூக்கும், மற்றொரு கார் ராஜசேகரனுக்கும் சொந்தமானது. மற்றொரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in