Published : 28 Jan 2019 10:35 AM
Last Updated : 28 Jan 2019 10:35 AM

உச்சி சூரியனே ஒன்றும் செய்ய முடியவில்லை; உதய சூரியனால் எங்களை என்ன செய்ய முடியும்? - பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

‘உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாதபோது, உதய சூரியனால் எங்களை என்ன செய்ய முடியும்’ என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத் தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னி லையில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது:

தமிழகம் காவி மயமாகி வரு வதையும், நரேந்திர மோடி 2019-ல் மீண்டும் பிரதமராக வருவதையும், இங்கு கூடியிருக்கும் பிரம்மாண்டக் கூட்டம் நிரூபிக்கிறது. இங்கு லட்சக்கணக்கான தாமரைகள் (தொண்டர்கள்) மலர்ந்துள்ளன. ஆனால் சூரியனைத்தான் காண வில்லை. தாமரைகளை பார்த்து சூரியனே பயந்துபோய் மறைந்து விட்டது. உச்சி சூரியனாலேயே எங்களை ஒன்றும் செய்ய முடியாத போது, உதய சூரியன் என்ன செய்து விடப் போகிறது.

தமிழகத்தில் காவித் துண்டு, காவித் தொப்பி, காவி ரத்தம் பாய்ச் சப்பட்டு கொண்டிருக்கிறது. இரும்பு மனிதரை, மனிதத்துவத்தை மட்டும் பார்ப்பவரை விமர்சிக்கின்றனர். வெளிப்படையாக ஆட்சி செய்ப வரை வெளிநாட்டுக்கு செல்கிறார் என்றும், பட்டியல் இன மக்களுக்கு பட்டியல் போட்டு சாதனை செய்யும் தலைவர்களை பட்டியல் போட்டும் விமர்சிக்கின்றனர்.

இந்த எதிர்மறையான விமர்சனங் களை தாமரைக் கூட்டம் தவிடு பொடியாக்க வந்துள்ளது. இந்தியா வுக்கு, தமிழகத்துக்கு பாஜகவின் பலத்தை காண்பிக்கும் முதல் திடலாக மதுரை அமைந்துள்ளது. இங்கு 10 நாடாளுமன்ற தொகுதி களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வந்துள்ளனர். இந்த 10 தொகுதி யிலும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடியின் காலடியில் வெற்றியை சமர்ப்பிப்போம்.

தமிழகத்தில் பாஜக எங்கே, தமிழகத்தில் தாமரை மலருமா, கால் ஊன்றுமா என்கிறார்கள். அவர்க ளுக்கு இங்கு வந்துள்ள தொண்டர் களே பதில். எந்த தியாகம் செய்தா வது மோடியை மீண்டும் பிரதமராக் கியே தீருவோம் என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x