Published : 03 Jan 2019 18:17 pm

Updated : 03 Jan 2019 18:17 pm

 

Published : 03 Jan 2019 06:17 PM
Last Updated : 03 Jan 2019 06:17 PM

மருத்துவ அறிவியல் தொழில்நுட்பம் என் காலத்தில் வளர்ந்திருந்தால் இன்னும் 5-7 ஆண்டுகள் நாட்டுக்காக ஆடியிருப்பேன்: சென்னையில் கபில் தேவ்

5-7

சென்னையில் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயன்சஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1983 உலகக்கோப்பை நாயகன் கபில் தேவ் இப்போதைய தொழில்நுட்பம் தான் விளையாடும் காலத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்காக இன்னும் 5-7 ஆண்டுகள் ஆடியிருக்க முடியும் என்றார்.

 

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயன்சஸ் ரோபாட்டிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ததை அறிவித்த நிகழ்ச்சியில் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதற்காகச் சென்னை வந்திருந்த கபில் தேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:

 

எனக்கு முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மட்டும் 4 முறை நடந்துள்ளது. 1980-ம் ஆண்டுகளில் இப்போதைய உயர் தொழில்நுட்பமெல்லாம் இல்லை. அறுக்காமல் உள்ளே என்ன சேதம் ஆகியுள்ளது என்பதை பார்க்க வசதியில்லை, எனவே அறுவை சிகிச்சை செய்துதான் பார்க்க முடியும். இன்று அப்படியில்லை. தொழில்நுட்பம் நன்மையைச் செய்துள்ளது, ஆனால் தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள மனிதர் இதை விடவும் முக்கியமானவர்.

 

என் காலத்தில் சிறந்த தொழில்நுட்பம் இருந்திருந்தால் நான் இன்னும் 5-7 ஆண்டுகள் கூடுதலாக நாட்டுக்காக கிரிக்கெட் ஆடியிருப்பேன்.

 

என்று கபில்தேவ் பேசினார்.

 

நடிகை ஜொதிகா பேசிய போது, ‘என் தாயாருக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது, முதலில் மும்பையில் நடந்த போது திருப்திகரமாக அமையவில்லை. ஆகவே இங்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தோம் இப்போது அவர் உலகையே சுற்றி வருகிறார்’ என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author