Published : 04 Sep 2014 11:32 AM
Last Updated : 04 Sep 2014 11:32 AM

‘பப்’ நடன கலாச்சாரத்தை அழிப்போம்: முத்தாலிக் ஸ்ரீராம்சேனா தலைவர் முத்தாலிக் பேட்டி

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தி யாவில் பப் நடனம் எங்கு நடந்தாலும் அந்த கலாச்சாரத்தை வேரோடு அழிப்போம் என ஸ்ரீராம்சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் நடக்கும் ‘பப்’ கலாச் சாரத்தை பகிரங்கமாக எதிர்த்துப் போராடி, பெண்கள் அமைப்பின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகி பெயர் பெற்றவர் பிரமோத் முத் தாலிக். புதன்கிழமை கோவை வந்த அவர், நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியா இந்துக்களின் தேசம், எனவே இந்துஸ்தான் என்றே அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே, உங்கள் கருத்து?

100 சதவீதம் இந்த கருத்தை வரவேற்கிறேன். இந்தியா இந்துக் களின் தேசம்தான். இங்குள்ள முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் ஆதியில் இந்துக் களாக இருந்தவர்கள்தான். சில கால மாற்றத்தால் அவர்கள் மதம் மாறிவிட்டார்கள். எனவே இந்த தேசத்தை இந்துஸ்தான் என்று அழைப்பதில் தப்பில்லை.

தமிழ்நாட்டிலும் ‘பப்’ டான்ஸ் கிளப்புகளில் நடப்பதாக வருகிற தகவல்கள் பற்றி?

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தி யாவில், உலகில் எங்கு பப் நடனம் நடந்தாலும் அதனை எதிர்ப்போம். இந்த கலாச்சாரத்தை வேரோடு அழிப்பதுதான் எங்களது முக்கியப் பணியாக இருக்கும்.

திருமணத்துக்கு முந்தைய உறவு பற்றி நிறைய இளைஞர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களே? சரியா?

வன்மையாக கண்டிக்கத்தக் கது. இப்படியொரு கலாச்சார சீர ழிவு எங்கு நடந்தாலும் எதிர்ப்போம்.

தமிழ்நாட்டில் எலைட் பார் அமையவிருப்பது குறித்து?

எலைட் பார் கூடவே கூடாது என்பதுதான் எங்கள் நிலை.

மோடியின் அரசு 100 நாள் சாதனை எப்படி?

50 சதவீதம் சரி, 50 சதவீதம் இந்துத்வா கொள்கைக்கு எதி ராகவே நடக்கிறது. போகப் போக மோடி ஆட்சியின் முழுமை யான உருவம் நமக்குத் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x