

ஆதார் விவரம் திருத்தக் கட்ட ணத்தை ரூ.30-லிருந்து ரூ.50 ஆக யுஐடிஏஐ நிறுவனம் உயர்த்தி யுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்டவை தகுதியற்ற நபர்களுக்கு சென்றதால், மத்திய, மாநில அரசுகளுக்கு அதிக அளவில் நிதி இழப்பு ஏற்பட்டது. இதைத் தடுப்பதற்காக இந்திய குடிமக்களுக்கு விரல் ரேகை பதிவு மற்றும் கண் கருவிழி போன்ற உடற்கூறு பதிவுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் ஆதார் எண் வழங்கும் சேவையை மத்திய அரசு தொடங்கியது. இந்தச் சேவையை மேற்கொள்ள இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தொடங்கப்பட்டது.
பொதுமக்கள் வீடு மாறும் போதும், பைசி எண்களை மாற்றும் போதும், ஆதார் அட்டையிலும் மாற்ற வேண்டியுள்ளது. ஆதார் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப் படம் தெளிவாக இல்லாததால், ஆதாரில் இடம்பெற்றுள்ள புகைப் படத்தையும் மாற்றி வருகின்ற னர். சிலரது ஆதாரில் பிறந்த நாள் விவரம் தவறாக இடம் பெற்றுள்ளது. எழுத்துப் பிழை களும் உள்ளன. கைபேசி எண் களும் இணைக்கப்படாமல் உள்ளன. மேலும் சிலருக்கு விரல் ரேகை உள்ளிட்ட விவரங்கள் முடக்கப்பட்டிருக்கும். அதை சீர் செய்ய மீண்டும் விரல் ரேகை விவரங்கள் பதியவேண்டி இருக்கும்.
இவற்றை, ஆதார் நிரந்தர மையங்களில் சென்று திருத்திக் கொள்ளும் வசதி ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்தச் சேவைகளுக்கு கட்டணமாக ஏற்கெனவே ரூ.30 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்தக் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆதார் பதிவு செய்த பின்னர், 5 வயதுக்குப் பிறகு, கட்டாயம் கை விரல் ரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை செய்ய வேண்டும். மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 15 வயதை கடந்த பின்னர் மற்றொரு முறை கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என யுஐடிஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.