

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டில் நிதி நிலைத்தன்மையை உருவாக்குவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்து பயிர்களுக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவைப்போல குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு பெரிய பலனளிக்கும். இதை அமல்படுத்துவது மிகப்பெரிய சவாலாகும்.
தற்போது ரூ.500 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆபரேஷன் கிரீன்’, ரூ.1,290 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மூங்கில் வளர்ச்சி நிதி ஆகியவை பாராட்டத்தக்கவை.
மாத சம்பளம் பெறும் தனிநபருக்கான வருமான வரி பாரம் குறைக்கப்பட்டால்தான் பொருள் நுகர்வு அதிகரிப்பதுடன் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். தனிநபர் வருமானத்தில் ரூ.40 ஆயிரம் நிலைத்த கழிவு என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அது பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைவிட குறைவாகும்.
ஆனால், உயர்த்தப்படவில்லை. ஓய்வூதியம் குறைந்தபட்சம் மாதம் ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்.
இந்த சூழலில், இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர், அனைத்து துறைகளுக்கும் சமமான கவனம் செலுத்தி, வளர்ச்சி அடிப்படையிலான பட்ஜெட்டை அளித்துள்ளார்.