Published : 24 Jan 2019 09:48 AM
Last Updated : 24 Jan 2019 09:48 AM

தமிழகத்தில் 10 ஆண்டில் ரூ.71 ஆயிரம் கோடி முதலீடு: வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கையில் தகவல் 

வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.71 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு இடம், முத்திரைக்கட்டணம் உள் ளிட்டவற்றில் சலுகைகள் அளிக்கப் படும் என்றும் நேற்று வெளியிடப் பட்ட தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு உபரகணங்கள் கொள்முதலுக்கான கொள்கையின்படி, கொள்முதல் செய்யப்படும் உபகரணங்களில் 30 முதல் 50 சதவீதம் உபக ரணங்கள் இந்திய தயாரிப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதையடுத்து, உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்கள், அவற்றுக்கான உப பொருட்கள் தயாரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளன.

இந்நிலையில், சென்னை வர்த் தக மையத்தில் நேற்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை கொள்கையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அந்த தொழில் கொள்கையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறைக்கான வானூர்திகள் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையில், முதல் 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரத்து 600 கோடியும், 10 ஆண்டுகளில் ரூ.71 ஆயிரம் கோடியும் முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன்மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

ஒரு லட்சம் பேருக்கு

இந்த துறையில் திறமையானவர் களை உருவாக்க திறன் வளர்ப்பு நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

அரசு - தனியார் இணைந்து குறைந்தது 50 ஏக்கரில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். இத்துறையில் தொழில் தொடங் கவும் ஒற்றைச்சாளர முறை பின்பற்றப்படும். தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்துக்கான வரி 100 சதவீதமும், தொழிற்சாலை கள் அமைக்கப்படும் நிலத்துக் கான முத்திரைத்தாள் கட்டணம் 50 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்படும்.

வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்பில், அவுட்சோர்சிங் பணிகள் 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தொழிலில் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கியிருப்பதால், தமிழகத்திலும் வாய்ப்பு அதிகரித் துள்ளது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கருத்தரங்கு

வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை தொடர்பாக மாநாட்டு அரங்கில் கருத்தரங்கம் நடந்தது. அதில், ராணுவ அதிகாரிகள், பேராசிரியர்கள் என பலர் பங்கேற்றனர். அதில் பேசிய, சென்னை ஐஐடி பேராசிரியர் ஜெனரல் சங்கர், ‘‘வானூர்தி, பாதுகாப்பு துறையில் உற்பத்தியில் மட்டுமின்றி, இந்த கொள்கை மூலம் பராமரிப்பு சேவை ஆகிய தொழில்களிலும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x