Published : 11 Jan 2019 09:30 AM
Last Updated : 11 Jan 2019 09:30 AM

அகில இந்திய வானொலி சார்பில் சென்னையில் முதல்முறையாக 22 மொழி கவிஞர்களின் கவிதை அரங்கம்: ‘மினி இந்தியா’வை காண்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெகிழ்ச்சி

அகில இந்திய வானொலி சார்பில் சென்னையில் முதல்முறையாக 22 மொழி கவிஞர்களின் கவிதை அரங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியால் ஒரு மினி இந்தியாவைக் காண்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்திய ஒருமைப்பாட்டை வளர்க் கவும், இந்தியாவில் உள்ள பல் வேறு மொழிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகை யிலும் அகில இந்திய வானொலி சார்பில் ‘அகில பாரத கவி சம்மேள னம்’ என்ற பன்மொழி கவிதை அரங்க நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பன்மொழி கவிதை நிகழ்ச்சி முதல்முறையாக சென்னையில் நடந்தது. கலைவா ணர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்துப் பேசினார். அவர் கூறிய தாவது:

அகில இந்திய வானொலி கடந்த 1956-ம் ஆண்டிலிருந்து இந்த கவிதை அரங்க நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 22 மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்கள் கவிதைகளை வாசிப் பது இந்த நிகழ்ச்சி ஒன்றாகத் தான் இருக்கும். தேசிய ஒருமைப் பாட்டுக்கும் இந்திய மொழிகளின் இணக்கத்துக்கும் இந்த கவிதை அரங்கம் ஓர் அருமையான தளம்.

முடிவில்லா இன்பம்

கவிஞர்கள் தங்கள் உணர்வு களை கவிதைகளாக வெளிப்படுத்து கிறார்கள். கவிதைகள் முடிவில்லா இன்பத்தை தருகின்றன. தமிழ்க் கவிஞர் பாட்டுக்கொரு புலவன் பாரதியார் மிகப்பெரிய தீர்க்கதரிசி ஆவார். நம் நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்பது அவர் 1910-ம் ஆண்டே கனவு கண்டு, ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந் திரம் அடைந்துவிட்டோமென்று ஆடு வோமே’ என்று கவிதை பாடினார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரால் திருக்குறளில், வாழ்வியல் கருத்துகளும், ஆட்சி முறை, திட்டமிடல், நேர மேலாண்மை, நீர் மேலாண்மை உட்பட இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. ‘அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்று அவ்வையார் திருக்குறளை பாராட்டியிருக்கிறார்.

வேற்றுமையில் ஒற்றுமை

அகில இந்திய வானொலி, கவிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்து வருகிறது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பு. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந் தும் கவிஞர்கள் வந்து கலந்து கொண்டிருப்பது ஒரு மினி இந்தி யாவை பார்ப்பது போல் தோன்று கிறது.

இவ்வாறு ஆளுநர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம் உட்பட 22 மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களையும், அவர்களின் கவிதைகளை இந்தி மற்றும் தமிழில் மொழிபெயர்த்த கவிஞர்களையும் ஆளுநர் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கவுர வித்தார்.

அகில இந்திய வானொலி தலைமை இயக்குநர் எப். செர்யார், தென்மண்டல தலைமை இயக்குநர் ராஜ்குமார் உபாத்யாய, கூடுதல் இயக்குநர்கள் (பொறியியல்) ராஜேந் திரன், தியாகராஜன், ராமச்சந்திரன், சென்னை வானொலி நிலைய இயக்குநர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மொழிபெயர்ப்புகள்

விழாவில், 22 மொழிகளின் கவிஞர் களும் தங்கள் கவிதைகளை மேடை யில் வாசித்தனர். அதைத்தொடர்ந்து அக்கவிதைகளின் இந்தி, தமிழ் மொழிபெயர்ப்புகள் வாசிக்கப்பட் டன.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் ஜி.திலகவதி, இந்தி ரன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந் திரன் ஆகியோர் பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகளை வாசித்த னர். கவிஞர் குகை மா.புகழேந்தி எழுதிய தமிழ்க் கவிதை கவியரங் கத்தில் வாசிக்கப்பட்டது. இந்த கவியரங்க நிகழ்ச்சி வரும் 25-ம் தேதி இரவு 10 மணிக்கு அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x