

தலைமைச் செயலகத்தில் ரகசியமாக யாகம் வளர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்ச ராக இருந்த ஆனூர் ஜெகதீசன், தற்போது பெரியார் திராவிடர் கழகத்தில் இருக்கிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பெரியார் கொள்கையை தீவிர மாக பின்பற்றுபவன் என்ற அடிப்படை யில் இந்த மனுவை தாக்கல் செய்துள் ளேன். இந்தியா மதச்சார்பற்ற நாடு. அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நடைமுறைகளை பின்பற்றக் கூடாது என்று தமிழக அரசு கடந்த 1968 ஏப்ரல் 29-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை தொடர்ந்து மீறப் பட்டதால், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் இதுதொடர்பாக வழக்கு தொடரப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த வழிபாட்டு நிகழ்ச்சி கள் எதுவும் நடத்தக் கூடாது என்று கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவை அவமதிக்கும் வகையில், சென்னை தலைமைச் செய லகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக ஒரு யாகம் வளர்க்கப்பட்டுள்ளது.
எனவே, இதுதொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோருக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் பெறுவதற்காக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு இந்த மனு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.