Published : 06 Jan 2019 08:43 AM
Last Updated : 06 Jan 2019 08:43 AM

மண் பரிசோதனை செய்யாததால் நானே ரூ.10 லட்சம் நஷ்டமடைந்தேன்: விவசாய அனுபவங்களை பகிர்ந்த தமிழக ஆளுநர்

மண் பரிசோதனை செய்யாமல் விவசாயம் செய்ததால் நானே ரூ.10 லட்சம் நஷ்டமடைந்தேன் என்று மதுரையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

பாரதிய கிசான் சங்க 4-வது மாநில மாநாடு மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் கே.ஆர்.சுந்தர் ராஜன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.

விழாவில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பேசியதாவது:

விவசாயிகள் பயிர்களை சாகு படி செய்வதற்கு முன் கண்டிப்பாக மண் பரிசோதனை செய்ய வேண் டும். சரியான மண்ணைத் தேர்வு செய்து, அதற்கு தகுந்த பயிர்களை சாகுபடி செய்தால் நிறைவான மகசூலைப் பெறலாம்.

தமிழகத்தில் நான் இதுவரை 28 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளேன். அங்கு நடை பெற்ற ஆய்வுக் கூட்டங்கள் அனைத் திலும் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், அதை விவசாயி களை கண்டிப்பாக செய்ய வைக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள் ளேன். இதற்காக நான் முதல்வரிடம் பேசி மண் பரிசோதனை திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.

7 ஆண்டுகளாக மகசூல் இல்லை

எதற்காக இதை சொல்கி றேன் என்றால் மண் பரிசோதனை செய்யாததால் நானே விவசாயத் தில் நஷ்டமடைந்துள்ளேன். எங்கள் குடும்பத்துக்கு நாக்பூரில் 90 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கு ஆரஞ்சு முக்கிய பயிராகக் கருதப்படுகிறது. அந்த அடிப்படை யில் நெல், சோளம் சாகுபடி செய்த எனது நிலத்தில் 1,500 ஆரஞ்சு மரக்கன்றுகளை வாங்கி நட்டேன். 7 ஆண்டுகள் ஆகியும் அந்த மரங் களில் மகசூல் கிடைக்கவில்லை. அதனால், 10 லட்சம் ரூபாய் நஷ்டமடைந்தேன்.

சந்தேகமடைந்த நான், அருகில் உள்ள விவசாய ஆராய்ச்சி மைய அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்தேன். நான் ஆரஞ்சு சாகுபடி செய்த நிலம், அதற்கு உகந்தது இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்திவிட்டு அந்த மண்ணுக்கு தகுந்த விவசாயத்தை இப்போது எனது குடும்பத்தினர் அங்கு செய்கின்றனர். நான் மண் பரிசோதனை செய்து சாகுபடி செய்திருந்தால் இந்த நஷ்டத்தை தவிர்த்திருக்கலாம்.

ஏராளமான மானிய திட்டங்கள்

மத்திய அரசு தற்போது விவசாயி களுக்காக சொட்டு நீர் பாசனம், மண் பரிசோதனை, பயிர் காப்பீடு திட்டத்துக்காக ஏராளமான மானியத் திட்டங்களை செயல்படுத் துகிறது. மத்திய அரசு விளை விக்கும் உற்பத்திப் பொருட்களை விற்கவும் விவசாயிகளுக்கு இணைய வர்த்தகப் பரிமாற்றம் மூலம் உதவுகிறது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x